Posts

Showing posts from 2015

ஆ - வரிசை ஆகாசக் கருடன்

Image
ஆகாசகருடன் – AKASA GARUDAN வேறு பெயர் – ஆகாசக் கெருடன், ஆகாயக் கருடன், கருடன், கொல்லன் கோவை, பேய்ச்சீந்தில் ஆங்கிலப் பெயர் – BRYOMS தாவரவியல் பெயர் – BRYONIYA EPIGOEA, CORAL CARPUS, EPIGAEUS HOOK     இது கொடிவகையைச் சேர்ந்தது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வேலிகளிலும் படர்ந்து இருக்கும். மருத்துவ பகுதி – சமூலம், சிறப்பாக கிழங்கு சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. செயல் – உடல் தேற்றி – ALTERATIVE          உரமாக்கி - ------- TONIC சமூலம் குணம் – சூலை, பாண்டு முத்தோடம், அக்கிப்புன், உட்சூடு கண்டமாலை, குடல்வலி, பெருநோய் ( மா குஷ்டம் )  ஆலவிடம் ( மாவிசம் ) கரப்பான், நமைச்சல் ஆகிய இவைகளை  கொல்லன் கோவைச் சமூலத்தால் நீங்கும். பாடல் – சூலை பாண்டு தைத்திரி தோட்டங்கள் வெப்புக் கண்ட மாலை குடலின்வழி மாகுட்டம் – ஆலவிடம் உட்கரப்பான் மெய்யரிப்பும் உண்டோ கொல்ல்ன்கோவை கைக்குளிருக்க விண்ணுங் கான் மருத்துவ குணம் – இது துட்ட விடம், பாண்டு, உட்சூடு, சூலை, கிரந்தி குட்டம் நமைச்சல் அக்கிப்புன், குடல் நோய், கண்ட