அ - வரிசை - அசோகம்
அசோகம்
--- ASOKAM
வேறுபெயர் --- அசோகம், ஆயில், செயலை, பிண்டி, காகோளி
ஆங்கிலப் பெயர் --- ASOKA TREE
தாவரவியல் பெயர் ---- SARACA INDICA LINN
அசோகமரம் இந்தியாவில் மேற்கு மழைத்
தொடர்ச்சியிலும் கஞ்சம், விசாகப் பட்டணம், முதலிய இடங்களில் வளர்கின்றது. மற்ற இடங்களில் தோட்டங்களில் வைத்தும்
வளர்க்கப்படுகிறது. இதன் பூ ஒரு பூங்கோத்துப் போல் இருப்பதுடன் மனத்தைக் கவரும்
படியான பட்டு பூச்சு நிறமொற்ற செம்மை நிறமுள்ளதாய் இருக்கும், இது மாசி பங்குனி மாதங்களில் புஷ்பிக்கும்.
மருத்துவ பகுதிகள் – பூ – பட்டை
சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – கார்ப்பு.
செயல் – துவர்ப்பி – ASTRINGENT
கர்ப்பாசய வெப்பகற்றி – UTRERINE SEDETIVE
கருப்பாசய உரமாக்கி – UTRERINE TONIC
குணம் – கருப்பை அழற்சி, கருப்பாசயத்திலிருந்து
உண்டாகும் இரத்தப் பேருக்கு (பெரும் பாடு) இரத்த பித்தம், இரத்த பேதி, பித்தப்
பிணிகள், நீரிழிவு ஆகிய இவைகள் நீங்கும்.
குறிப்பு – உதிரவேங்கை ஒடுவடக்கி, விடத்தலை, விளா, வேல்
இவைகளின் குணம் அசோகுக்கு உண்டு.
பூவின் உபயோகம் – பூவை நுண்ணிய பொடி செய்து, கால் பலம்
எடுத்து ஆழாக்கு நீருடன் கலந்து கொடுக்க, இரத்த பேதி, இரத்தமும் சீதமும் கலந்த
பேதி நிற்கும்.
பட்டையின் பலன் – பட்டையை இடித்துச் சாறு பிழிந்து கால்
முதல் ஒரு உச்சிக் கரண்டியளவு கொடுத்து வர
பெரும்பாடு தணியும்.
பட்டை பலம் -3 எடுத்து சிதைத்து இரண்டு ஆழாக்கு பசுவின் பால் எட்டு
ஆழாக்கு நீரில் கலந்து கொதிக்க வைத்து கசாயத்தை ஐந்தில் ஒரு பங்காக்கி நாள்
ஒன்றுக்கு இரண்டு மூன்று தரம் கொடுத்து வர பெரும்பாடு முதலிய இரத்தப் போக்கு
நிற்கும்.கருப்பை தோடமுற்றால் வீட்டுக்கு விளக்கமான மூன்றாம் நாள் தொடங்கி இரத்தம்
நிற்கும் நாள் வரை கொடுக்க கருப்பை தோடம் நீங்கிப் பலப்படும். குறிப்பு -- இதன் பட்டை பொடியாக கடைகளில் கிடைக்கும்

Comments
Post a Comment