அ - வரிசை - அந்தரத்தாமரை

அந்தரத் தாமரை --- ANTARA TAMARAI











வேறு பெயர் --- ஆகாசத் தாமரை
ஆங்கிலப் பெயர் --- thewester – lettuce
தாவரவியல் பெயர் --- pistia stratiotes – linn
இது நீர் பாங்குள்ள குளம் குட்டை ஓடை முதலிய நீர் பரப்பில் மிதக்கும் செடி
மருத்துவ குணம்இலை, வேர்
சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவுகார்ப்பு
செயல் – இலைகுளிர்ச்சியுண்டாக்கி REFRIGERANT
                 உள்ளழாற்றி ------------- DEMULCENT
                 மலமிளக்கி --------------- LAXHTIVE
          வேர்வரட்ச்சியகற்றி -------- EMOLLIENT  
குணம் – அழுகிரந்தி, குட்டம், கரப்பான், மார்புக்குள்,கட்டுகின்ற கிருமிக் கூடு, ஆகிய இவைகள் போம். மேலும் நீர்ச் சுருக்கு, மூலம், சீத பேதி, பொடி அல்லது வறட்டு இருமல், தாபிதம் இவைகளும் இதனால் நீங்கும்.









பாடல் –
       அழுகிரந்தி குட்டம் அடர்ந்த கரப்பான்
       புழுவுறுமக் கூடுமுதற் போகும் – அழகாரும்
       இந்திரநீ லக்கருங்கண் ஏந்திழையே ! எப்போது
       அந்தரத் தாமரையா லாய் -----   அகத்திய குணவாகடம்

இலைச்சாறு பிழிந்து சுரசஞ் செய்து தெளிவிருத்து அரை முதல் கால் ஆழாக்கு வீதம் (தேனும் – சிறிது ) கலந்து கொடுக்க குணத்தின் படி கீழ்க்கண்ட பிணிகள் தீரும்
இலையை அரைத்து, அடிதள்ளிப் போதல், மூலம் வித்திருதி, தாபிதம் இவைகளுக்குக் கட்டலாம்.
இலையை கட்டி நீரில் வேக வைத்து நீரை பிழிந்து விட்டு திப்பியை அழுகிரந்தி, குட்டம், கரப்பான், இவைகளுக்கு வைத்துக் கட்டலாம். அரிசி தேங்காய் பால், அந்தரத் தாமரையிலை இவைகளை ஒன்று கூட்டிச் சமைத்துச் சீத பேதியில் கொடுக்கலாம்.
இலையின் சுரசத்துடன் பண்ணிரும் சருக்கரையும் கூடி இருமல் சுவாசம் இவைகட்க் கொடுக்கச் சாந்தமாகும். மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் இப்பூண்டை இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஓர்வித வெகுட்டல் மனத்தால் மேற்ப்படி பூச்சிகள் மயங்கி இறக்கும்.


இப் பூண்டின் சமூலத்தை சுட்டுச் சாம்பலாக்கி எச்சில் தழும்பு, மண்டைக் கரப்பான் இவைகளுக்கு போட நீங்கும். 

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி