அ - வரிசை - அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி – AMMAN – PACHCHARISI






























வேறுபெயர் – சித்திரப் பாலாடை
ஆங்கிலப் பெயர்AUSTRALIAN ASTHUMA WEED
தாவரவியல் பெயர் EUPHORBIA  PLULIFERA , EUPHORBIA HIRATA , EUPHORBIA PAVIFLORA
இது சிறு கொடி வகுப்பைச் சேர்ந்தது எனினும், இச்சாதியில் சில செடிவகையில் குத்துச்செடி போல் உள்ளதும் இருக்கிறது. இது வயல் வெளிகளில் ஏராளாமாய் கிடைக்கும். இது வருடாந்திரப் பயிர்களில் ஒன்று, வருடம் முற்றும் பூக்கும் பூமியுடன் ஓட்டிப் படர்கின்ற வகுப்பில் வெண்ணிறம், செந்நிறம் உள்ளது பூமிக்குமேல் சிறு பூண்டைப் போல் வளர்வதிலும் மேற்கண்ட நிறங்கள் உண்டு. இருப்பினும் சுவையிலும் செய்கையிலும், குணத்திலும் மிக்க ஒற்றுமை உண்டு.
சுவை துவர்ப்பு, இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவுஇனிப்பு
        செயல் – குளிர்ச்சி உண்டாக்கி ---- REFIRIJERANT
                 மலமிளக்கி --------------------- LAXATIVE
                 துவர்ப்பி ------------------------- ASTRINGENT
குணம் – எரிபுண் மலக்கட்டு, பிரமேகக் கசிவு, மேகத் தடிப்பு, நமைச்சல் இவைகளை நீக்கும்.
பாடல் –
காந்தல் விரணமலக் கட்டுமே கத்தடிப்புச்
சேர்ந்த தினவு இவைகள் தேசம்விட்டு – பேர்ந்தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்தகண்ணாய்! கூறு
                                                                         ----- அகத்தியர் குணவாகடம்
இது வாதப் பிரமேகத்தை நீக்கி சுக்கிலத்தை விருத்தி செய்யும் நிற்க வெள்ளியை நீற்றும்.
பாடல் –
அரத்வம் மான்பச்சரிசி யெனும் மூலி
குரத்தவன்மேக மொழியும் – தரத்த தொரு
விந்துவும் உண்டாகும் வெள்ளி பொடியாம்
இந்துவினும் வாண்முகத்தாய் ! என்
                                                                           ---- அகத்தியர் குணவாகடம்
        





   சிவப்பு அம்மான் பச்சரிசியை சமூலம் உலர்த்திச் சூரணம் செய்து கற்கண்டு பொடி சமபாகம் சேர்த்து வேலைக்கு  -- பலம் உட்கொண்டு உடனே பசுவின் பாலைச் சாப்பிட மேற்கண்ட நோய் நீங்கி சுக்கில விருத்தி உண்டாகும்.
சிறு அம்மான் பச்சரிசி
        இதனால் மேக வெப்பம் தீரும்; இது பசுவின் பால் குணத்திற்கு ஒப்பாகும். மேற்கூறிய அம்மான் பச்சரிசி இலைகளை அறைக்காமல் தின்னாலும் அரைத்துப் பாலில் அல்லது தயிரில் கரைத்துக் காலையில் உண்டுவந்தாலும் மேற்க் குறித்த பிணிகள் நீங்கும்.
        இவைகளின் காயை துவையல் செய்து சாப்பிட மலபந்தம் ஒழியும் இதன் பாலை விரனங்களுக்கு உதடு நா வெடிப்புகளுக்கு தடவிவர புண்னாரும். நகச் சுற்றுக்கு தடவிவரலாம்.
        சிறு அம்மான் பச்சரிசிப் பாலை இலிங்க பாசனத்துக்கு தடவி உலர்த்தி பிறகு பாலால் சுருக்கிட மெழுகாகும் இது மேகப் பிணிகளுக்கு உதவும்.
பாடல் –
யாதுபுகல் வேனமுதலா லிங்கரு மெலுகாகுந்
தீதுபுரி மேக வெப்பந் தீருமினும் – ஒதுங்க்கான்
நேரம்மான் சீரமொக்குந் தின்னுதயாஞ் செம்மை நிறச்
சீரம்மான் பச்சரிசிச் சேர் 

                                                                            --- அகத்தியர் குணவாகடம் 

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி