அ - வரிசை - அல்லி

அல்லி – ALLI












வேறு பெயர்ஆம்பல், குமுதம், கைரவம்
ஆங்கிலப் பெயர்  THE WATER LILLY (WHITE)
தாவரவியல் பெயர் NYMPHOEA
        இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பிற் சேர்ந்தது. வெண்மை, செமை, வெண்மையும் செம்மையும் கலந்த நிறங்கள் உள்ள பூக்களை பூக்கும் வகைகள் உண்டு. குளிர் காலத்திலும், மழை காலத்திலும் இது ஏராளமாய் பூக்கும்.
மருத்துவப் பகுதிபூ, கொடி, இலை, கிழங்கு, காய்
சுவை சிறு துவர்ப்பு, வீரியம்சீதம், பிரிவு இனிப்பு
செயல் – வரட்ச்சியகற்றிEMOLLIENT
குணம் – அல்லி பூ நிறத்தால் மூன்று வகைப் படினும் குணத்தில் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும்.
வெள்ளல்லியின் பூ குணம் – இதனால் மேகம் ஆண்குறித் தூவார விரணம், நீரழிவு, தாகம், உட் சூடு ஆகிய இவைகள் விலகும்.
பாடல் –
மேகம் அரும் புண் ஆறும் விட்டேகும் நீரழிவு
தாகம் தணியும் தழல் அகலும் – வாகான
மெல்லியலே ! ஆயில் மறை வேதியரெல்லாம் உரைக்கும்
அல்லிமலரால் அறி
                                                                           --- அகத்தியர் குணவாகடம்
செவ்வல்லியின் பூ குணம்
        இதனால் மூத்திரம் சேர்ந்திறங்கும் நீரிப்பிணி [ மூத்திர ரோக சங்க வாதம் ] மேகப் பிணி (நீரிழிவு)      வெப்பத்தால் உண்டாகும் கண் நோய்கள் இரத்தபித்தம், புண் முதலிய பல பிணிகள் தீரும்.





















பாடல் –
செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திரங்கு நீர்ப்பினியோ
டொவ்வுமே கப்பினியும் ஒய்வதன்றி – இவ்வுலகிற்
கண்ணின் நோய் தீரும் கனத்த பித்த ரத்தமொடு
புண்ணின் நோய் பன் நோயும் போம்
                                                                            --- அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம்
        மேற்கண்ட நோய்களுக்கு பூவைக் கொண்டு மணப்பாகு செய்தும் கிழங்கைச் சூரணம் செய்தும் தக்க அளவில் கொடுக்கலாம், கொடியும், கிழங்கும் வெப்பத்தைத் தணிக்கும் தைலங்களிலும் சேரும். இலையைக் கஷாயம்மிட்டுப் புண்களைக் கழுவலாம்


 





<------------- அல்லி மஞ்சள் 








அல்லியின் பல நிறங்கள் ---------->












கிழங்கை உட்கொள்ள மேக அனல் உஷ்னம், தாகம் ஆகிய வெப்ப ரோகங்கள் தணியும்.
பூச்சாற்றாலும் கிழங்கின் சார்ராலும் கற்பூர சிலாசத்தை பற்பம் செய்து தர மேகப் பிணிகளுக்கு மேக அழல் உட் சூடு தாகம் இரத்த பித்தம் முதலியவை தீரும்

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி