அ - வரிசை - அவுரி
அவுரி – AVURI
வேறு பெயர்
– அவிரி, நீலி
ஆங்கிலப்
பெயர் – INDIGO PLANT
தாவரவியல்
பெயர் – INDIGOFERA TINCTORIIA
இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் பயிராகும் செடிவகுப்பு இச்
செடியினின்றும், நீலம் ( நீலம் என்னும் கலர் பவுடர் ) எடுக்கப்படும் இது ஏராளாமாய்
பீகார் போன்ற இடங்களில் பயிரடப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படுகிறது.
இப்போது இது அதிகம் அனுப்பப்படுவது இல்லை.
மருத்துவ பகுதி --- இலை,வேர்
சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு
செயல் – நுட்புழுக் கொல்லி – GERMICIDE
முறை வெப்ப கற்றி – ANTI PERIODIC
வெப்பமுண்டாக்கி --- STIMULANT
குணம் – தாவர
கந்த மூலவிடம் – வாதசுரம், காமாலை மாந்தம், சீதளம், சந்நிபாதம், கீல்வாதம் பாம்பு
விடம், இவைகளை போக்கும். உடல் பொன்னிறம் பெறும்
பாடல் –
உரியஅவு ரித்தலைதான் ஒது பதினெண்
அறியனஞ்சைத் தின்றவர்க்கும் ஆகும் – தொவரிய
வாதவெப்பு காமாலை மைந்தர் குருமாந்தஞ்
சீதம் அகற்றுந் தெரி
---- அகத்தியர் குணவாகடம்
சந்நி பதின்மூன்றுஞ் சந்தொடித்த வாதமுதல்
உன்னு விடக்கடியும் ஓடுங்கான் – மின்னுங்
கவுரிநிறம் உண்டாகும் காசினியுள் நல்ல
அவுரியிலை தன்னால் அறி
---
அகத்தியர் குணவாகடம்
வேர் – குணம் – எல்லா
விடங்களையும் முறிக்கும் சுர மூர்ச்சை, வெட்டை (வெள்ளை) குண்மநோய் முதலிய பல
நோய்களைப் போக்கும்.
பாடல் –
எல்லா விடங்களுக்கு ஏற்ற முறிப்பாகும்
பொல்லாச் சுர மூர்ச்சை பொங்கும் வெட்டை – நில்லாப்
பவுரிதருங் குன்மமுதல் பன் நொயொழியும்
அவுரிதரும் வேர்க்கறி.
----- அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் –
அவுரியிலையைக் குடிநீர்
செய்து கொடுக்க விடங்கள், வாதசுரம், சந்நி பாதம்,காமாலை, மாந்தம் கீல்வாதம் சீதளம்
நீங்கும் அவுரிவேரைக் குடிநீர் செய்து
கொடுக்க, குண்மநோய் வெள்ளை, சுர மூர்ச்சை நீங்கும், எல்லா விடங்களையும்
முரிக்கும்.
அவுரியிலை, அவுரிவேர் பட்டை, பொறித்த பெருங்காயம், மிளகு இலைச்சாறு சம
எடை தூக்கி நன்றாய் அரைத்து சுண்டாக் காய் அளவு மாத்திரை செய்து நாள் ஒன்றுக்கு
காலை ஒன்று மாலை ஒன்றாகக் கொடுத்து உப்பில்லாப் பத்தியம் வைக்க நரம்புச் சிலந்தி
குணமாகும். மூன்று முதல் ஐந்து நாள் வரை கொடுக்கலாம். இதையே ஈரமாய் இருக்கையில்
நரம்புச் சிலந்தி தோன்றிய இடத்தில் வைத்துக் கட்டலாம். இம் மூலிகையின் உபயோகம்
பலவற்றை நஞ்சு நூலில் காண்க

Comments
Post a Comment