அ - வரிசை - அவரை
அவரை --
வேறு பெயர்
– சிம்பை, சிக்கடி, நிட்பாவம், நிஷ்பவம்.
தாவரவியல்
பெயர் --- DOLICHOS LABLAB, LINN
இது கொடி வகுப்பைச்
சேர்ந்தது. தெனிந்தியாவில் சாதாரணமாய் வீடுகள் தோறும் பயிரிடப்படுகிறது ஆடி
மாதத்தில் விதை நடப்படும் ஆறு மாதப் பயிர்.
இந்த அவரைக்
குடும்பத்தில் பல வகை உண்டு அவை –
1.
சீனியவரை --- DOLICHOS FABOFORMIS
2.
செவ்வரை ------) DOLICHOS LABEAB ( WITH
RED FLOWERS
3.
நகரவரை ------ DOLICHOS RUGOSUS NOB
4.
வெள்ளை
அவரை – DOLICHOS LABLAB ( WITH WHITE FLOWERA )
மருத்துவ
பகுதி – இலை,
பிஞ்சு, காய்
இலை – சுவை – துவர்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – இனிப்பு
செயல் – அகட்டுவாய் வகற்றி – CARMINETIVE
துவர்ப்பி
----ASTRINGENT
குணம் – அவரை இலைக்குத் தலைநோய், கிரகணி, ஊழி புண் ஆகிய இவைபோம், தீபனத்தை
தூண்டும்
பாடல் –
அவரையிலைக்குத் தலைநோய் ஆழ்ந்தகி ராணி
ஐவரும் விஷுசிமுதல் ஏகுந் – தவராமல்
கொண்டவர்க்குத் தீபனமாங் கொத்தாய் ! விரணமறுங்.
கண்டவர்க்குத் தொர்ருமிது காண்
------ அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் –
அவரையிலைச் சாற்றுடன்
கொஞ்சம் சுண்ணாம்பு சிற்றாமணக்கு எண்ணெய் விட்டுக் குழைத்துப் புண்ணின் மேற் பூசப்
புண் ஆறும் இச் சாற்றுடன் கற்கண்டு பொடி சேர்த்து கிளறிக் கொட்டைப்பாக்கு அளவு
கொள்ள கிராணி சீத பேதி முதலிய வயிற்றுப்போக்கு நிற்கும்.
ஒரு துண்டுச் சீலையை
இச்சார்ரில் நனைத்து நெற்றிமேல் போட்டு வர தலை நோய் தலை பாரம் நீங்கும்.
பிஞ்சு – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு,
செயல் --- தாது வெப்பகற்றி - SEDATIVE
குணம் –
விதை முதிராத வெள்ளை
அவரைப் பிஞ்சு திரி தோஷம்,புண், சுரம், கண் விழிக்குள் சிலேத்தும முதிர்ச்சியால்
உண்டாகும் பிள்ளம் முதலிய ரோகிகட்கும், மருந்துன் போர்க்கும் இரவு உணவிற்கும்
ஆகும்.
பாடல் –
கங்குலுணவிற்குங் கறிக்கும் உறைகளுக்கும்
போங்குதிரி தோடத்தோர் புண் சுரத்தோர் – தங்களுக்குங்
கண்முதிரைப் பிள்ள நோய்க் காரருக்குங் கரமுறையா
வென்முதிரைப் பிஞ்சாம் வழி
----- அகத்தியர் குணவாகடம்
வெள்ளவரைப் பிஞ்சைச் சமைத்துண்ண மேற்கண்ட குணங்களைப் பெறலாம்.
காய் – சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.
செயல் – காமம் பெருக்கி – APHRODISIAC
குணம் –
கொட்டை முதிர்ந்த அவரைக்காயைச் சமைத்து உண்டால், அரோசகம் தீரும். ஆனால்,
மந்தம் பேதி வாத நோய், கப நோய்,சூலை ஆகியவை உண்டாகும்.
பாடல் –
கோட்டைஅவ ரைக்காயால் கோரஅ ரோசக நோய்
கிட்டா தென் பார் மருந்தின் கீர்த்தி கெடுந் –
துட்டமந்தம்
பைய உண்டாம் பேதி உண்டாம் பாறிப் பணிலம் உண்டாகும்
ஐயம் உண்டாம் சூலையும் உண்டாம்
----- அகத்தியர் குணவாகடம்
மேற்கண்ட அவரைகள் அன்றி –
காட்டவரை ( பேயவரை ) அல்லது ( காட்டு மொச்சை ) – DOLIHOS TETRAS
PERMAS ( a kind of beans growing
wild ) தீவாந்தர அவரை ( a kind beans brought from the eastern is lands )
பேயாவரை ( a large kind of beans )
கோழியாவரை – DOLICHOS
GLADIAS என்பவைகளும் உண்டு
இவை அல்லாமல் – குத்துச் செடி வகையில் கொத்தவரை – என்று ஒரு
ஜாதி உண்டு.
குறிப்பு
– 4 – 5 ல் கண்டவைகளின் குணம் மற்ற விபரங்களை அதனதன்
தலைப்பில் பின்னால் பார்ப்போம்
.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment