அ - வரிசை அறுவதா

அறுவதா – ARUVATHA









வேறுபெயர்அர்வதா – சதாப்பு
தாவரவியல் பெயர் --- RUTA ANGUSTI FOLIA, RARAVEOLENS
இது 2-3 அடி உயர முல்லா செடி. அதிக வெப்பமும் அதிக குளிர்ச்சியும் இல்லா இடங்களில் பயிராகும். இந்தியாவில் பயிராகிற இச்செடியின் குணம் தென் ஐரோப்பாவிலும்,தென் அமெரிக்காவிலும் பயிறாகிறதற்கு தாழ்ந்ததல்ல. இதன் இலை பச்சையாக இருக்கும். இதில் எண்ணெய் பசை உண்டு. ஒரு வித மனமுண்டு சுவைத்தால் வேகுட்டல்லுடன் கைப்பும் விறுவிறுப்பும் இருக்கும். உலர்ந்தால் இதன்குனம் குறையும்.
மருத்துவ பகுதி – இலை
சுவைகைப்புடன் கார்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவுகார்ப்பு.
செயல் ----
இசிவகற்றி – -------------------ANTISPASMODIC
அகட்டுவாய் அகற்றி ---- CARMINETIVE
வெப்பம் உண்டாக்கி ------ STIMULANT
புழுக் கொல்லி ---------------- ANTHELMINTIC
தடிப்புண்டாகி ------------------- RUBEFACIENT
உரமாக்கி --------------------------- TONIC
 ருதுவுண்டாக்கி  ---------------  EMMENOGOGUE
குணம் –
        சூதக சந்நி, சூதக வாயு, பிரசவ மாதர்களின் வேதனை, வயிற்றுப் பொருமல் (வாத) வயிற்றுவலி, அசெஈரணம், நாட்பட்ட மார்புச்சளி, கிருமி நோய், பால் மாந்தம், காக்கை வலி மாந்த வலி, மாந்த சுரம், கண்பேதி ஆகியவைகளுக்கு கொடுக்கலாம்.
மருத்துவ குணம்
        இலையை கசக்கி சாறு எடுத்து தேன் கலந்து தரலாம், அல்லது உலர்ந்த இலையை சூரணம் செய்து தேனில் குலைத்தும் அல்லது காசயம் செய்தேனும் மேற்கண்ட நோய்களுக்கு கொடுக்கலாம். வெளிப்பிரயோகமும் செய்யலாம்.
        இருமலினால் பீடிக்கப்பட்ட நோயாளியிருக்கும் அறையில் இலையை துபமிட இருமல் சாந்தமாகும்.
        துற்பலத்தால் உண்டாகிற மந்தாக்கினிக்கு  இதை உபயோகப்படுத்தலாம். பிரசவகாலத்தில் பிண்டம் வெளிப்பட இதைச் சிலர் உபயோகப் படுத்துகின்றனர். மற்றவர்கள் இதனால் பிண்டம் சேதப் படுகின்றது என்றும் அக்காலத்தில் இதைக் கொடுப்பது நன்மையல்ல வென்றும் கருதுகிறார்கள்.
பிரயோக அளவு – சிறுவர்களுக்கு 50 முதல்  60 துளிவரை, பெரியவர்களுக்கு ¼ முதல்  ½ வராகன் எடை, பெரியவர்களுக்கு கசாயம்  ¼  முதல் ½  ஆழாக்கு


பீநிசத் தைலாம் ---
        இந்தச் செடியில் ஒரு வித சிறு பூச்சி தோன்றி பின் அது ஒரு புழுவாக மாறும். அந்தப் புழுவை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் ஐந்து பலம் நல்லெண்ணெய் விட்டு, பின் அதி கால் பலம் ஓமம் பொடித்துப் போட்டு சேர்த்து வெய்யிலில் வைத்துவர புளுகரைந்து எண்ணெய்யுடன் கலந்து போம் இதை வடிகட்டி வைத்துக் கொண்டு இதில் இரண்டு துளி மூக்கில் விட்டுவர பீனிச ரோகங்கள் போம்

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி