ஆரைக்கீரை – ARAIKKIRAI
ஆரைக்கீரை – ARAIKKIRAI
வேறுபெயர் – சதுப்பன்னி, நீர் ஆரை
தாவரவியல் பெயர் - MARSILEA QUADRIFOLIA
இது நீர் தங்கிய இடங்களில் பயிராகும் நான்கு
இதழ்கள் இலை உள்ளது இலைக் காம்பு நீண்டு இருக்கும், ( இது போல் தரைப் பகுதியில்
வளரக்கூடிய ஆரைக்கீரை இதே உருவத்தில் இருக்கும் அது புளிப்புச் சுவை இருக்கும் அதை
புளியாரை என்பர். இது தாம்பரத்தை சுத்தி செய்யவும் பற்பம் செய்யவும் பயன் படும்
இது பற்றி அதன் தலைப்பில் அடுத்து விவரிப்போம். )
சுவை – இனிப்பு,
வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.
செயல் – குளிர்ச்சியுண்டாக்கி
– REFRIGERANT
மருத்துவ குணம் –
இது பித்தநோய், அதிமூத்திரம் இரத்தபிரமேகம், ஆகியவைகளைப் போக்கும்.
தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரழிவைப் புண்நீரை – யொன்றுமிந்த
வூராசைச் சாராம லோட்டிவிடு நாலிதழார்
நீராரைக் கீரையது நீ
----அகத்தியர் குணவாகடம்
மருத்துவ செயல் –
இதைச் சமைத்துண்ண மேற்கண்ட ரோகங்களைத் தீர்க்கும் நாவிற்கு உருசியைத்தரும்
இதை நிழலில்
உலர்த்திக் கஷாயம் செய்து அதில் பால் சருக்கரை சேர்த்து உட்கொண்டு வரலாம்.

Comments
Post a Comment