ஆற்றுத்துமட்டி
ஆற்றுத்துமட்டி
– ARTU –
TUMATTI
வேறு பெயர் – பேய்க் கொமட்டி,
பேய்த்துமட்டி, துமட்டி,வரித்துமட்டி, கலிங்கம், பிச்சிக்காய்
தாவரவியல் பெயர் – CITRULLUS COLOCYNTHIS
ஆங்கிலப்
பெயர் --- COLOCYNTH – FRUT OF
இது இந்தியாவில்
மணற்பாங்கான இடங்களிலும் நீர்வற்றிய காலத்தில் ஆற்றுப் படுகைகளிலும் தானாகவே
முளைத்துப் பயிராகும் எனினும் வடமேற்கு மாகாணத்திலும், பஞ்சாப், சிந்து,
மத்தியமாகானம், தென்னிந்தியாவிலும் ஏராளாமாய்ப் பயிராகும். கொடிவகுப்பைச்
சேர்ந்தது.
மருத்துவ
குண பகுதி – காய், பழம்,
வேர், வித்து.
சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.
செயல் –
குறைந்த அளவில்
– கோழையகற்றி – EXPECTORANT
உடற்தேற்றி – ALTERATIVE
மத்திய அளவில் - மலநீராக்கி – HYDROGOGUE
அதிக அளவில் - சிறுநீர் பெருக்கி – DIURETIC
வாந்தியுண்டாக்கி – EMETIC
குடற்புரட்டி – GASTRO – INTESTINAL
IRRITANT
காய்,
பழம் –
இதன் காய் அல்லது பழத்தை வாழங்கும் முன் வரகு
வைக்கோலால் சுட்டு பழத்திற்குள் இருக்கும் சோறு, விதைகளையும், மேலில் உள்ள தோலையும்
நீக்கி தோலுக்கும் நெருங்கியுள்ள சதைப் பற்றாய் உள்ளதை மாத்திரம் எடுத்து உபயோகிக்
வேண்டும். இன்றேல் கொடிய வாந்தியும் வயிற்றுப் போக்கும் புரட்டலும் உண்டாகும்.
மருத்துவ
குணம் –
இதனால் கீழ் பிடிப்பால் நடையின்றிக் கிடத்தல்
சோர்தல் முதலிய வாதரோகங்கள், கருப்பையைப் பற்றி அடைகின்ற ஆமாம் இரத்தக் குன்மக்
கட்டி அகாலருது ஆகிய இவைகள் நீங்கும்.
கிடையெங்கே சோம்பலெங்கே கேடுறச்செய் வாதக்
கடையெங்கே யாற்றுக் கலிங்க – மடைதிறக்கின்
அண்டை யடைசலெங்கே யாயிழையார் சூதகத்தின்
உண்டை யுடைசலெங்கே யோது
தேரையர் குணவாகடம்
மருத்துவ
குணம் – இதன் சதையை உலர்த்திச் சூரணம் செய்து,
ஒன்றுமுதல் நான்கு குன்றியளவு உபயோகிக்க மலக்கட்டு,சோபை ஆவர்த்த வாதங்கள் போம்.
பழத்தைப்பிழிந்த சாற்றில் அரைப்படி எடுத்துக்
குழம்பாய்க் காய்ச்சி அதனுடன் பொரித்த பெருங்காயம் பலம் அரை, ஏலரிசி, வால்மிளகு,
கடகரோகினி, குரோசாணி ஓமம் வெங்காரம், இந்துப்பு இவைகளின் சூரணம் வகைக்கு வராகனெடை
அரை, சேர்த்து அரைத்து இரண்டு முதல் நான்கு குன்றியளவு கொடுக்க மலபந்தம் சூதகக்
கட்டு சூதக சன்னி இரத்த குன்மம் முதலியன நீங்கும்.
பழத்தின்சாறு அநேக மெழுகுகளிலும்
தைலங்களிலும் சேரும்
உதாரணம் – கலிங்காதி மெழுகு,
கலிங்கத் தைலம்.
இதன் வேரைச் சூரணம் செய்து சிறிய அளவில்
கொடுக்க வயிற்றுப் பொருமல் இருமல் குழந்தைகளுக்கு உண்டாகும் இரைப்பு உப்பிசம் மலக்
கிருமி போகும்.
வேரை அரைத்து
வயிற்றிப் பொருமலுக்குப் பற்றிடலாம்.
வேரையாகிலும்
பழத்தையாகிலும் எட்டிக் கொட்டையைச் சேர்த்தும் சேர்க்காமலும் நீர்விட்டு அரைத்து
கட்டிகள்மீதும் குருவின் மீதும் பற்றிடலாம்
வேரையரைத்துப்
புற்கை செய்து முலை வீக்கத்திற்கு கட்டலாம். வேரும் திப்பிலியும் சமபாகமெடுத்து
நீர்விட்டரைத்து குன்றியளவு மாத்திரை செய்து கொடுக்க கீல்வாதம் சாந்தமாகும்.
விதையிநின்று எடுத்த எண்ணையால் பாம்பு, தேள்
விஷம் வயிற்றுவலி, காக்கைவலி குணமாகும் மயிரும் கருப்பாகும்.
குறிப்பு – அதிக அளவில் இதன் சம்பந்தமான மருந்துகளைக் கொண்டால் வாந்தி குடல்புரட்டல், இரத்தபேதி உண்டாகலாம். குடற்புண் பட்டவர்களுக்கும் கருப்பவதிகளுக்கும் இதனால் செய்யப்பட மருந்தை உபயோகிக்கலாகாது. மேலும் தக்க மருத்துவரின் நேரடிப்பார்வையில் உபயோகிக்க வேண்டும்




Comments
Post a Comment