ஆ - வரிசை ஆலமரம்

 





ஆலமரம் – ALAMARAM

வேறுபெயர் – இயக்குரோதம், காமரம், கோளி, தொல்மரம், பழுமரம், பூதம், வடம், வானோங்கி.

தாவரவியல் பெயர் - Ficus  Bengalensis 

 ஆங்கிலப் பெயர் - The Banyan tree

     இம்மரமானது இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் சர்வ சாதரணமாக இருக்கக் கூடியது.

மருத்துவ உபயோக பகுதி – இலை, பழம், விழுது, பால், பூ

சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல் –  

     துவர்ப்பி              - ASTRINGENT

     உரமாக்கி             - TONIC

     காமம் பெருக்கி        -  APHRODISIAC

சமூலம் – குணம் – இதன் சமூலத்துக்கு மேகம் வயிற்றுக் கடுப்பு, நீரழிவு, இவைகளைப் போக்கும் சக்தியுண்டு.

சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்கடுப்பைக்

கொல்லுகின்ற நீரளிவைக் கொள்ளுங்காண் – நல்லாலின்

பாலும் விழுதும் பழமும்விதை யும்பூவும்

மேலும் இலையுமென விள்.

அகத்தியர் குணவாகடம்

ஆலம்பால் :--

செயல் – துவர்ப்பிAstringent

சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

குணம் – மேகத்தைப் போக்கும் அசைகின்ற பல்லை இருக்கும் தலைக்குக் குளிர்ச்சியைத் தரும் சுக்கிலத்தை விருத்தி செய்யும்.

ஆலம்பால் மேக மறுத்தசையும் பல்லிறுக்குமங்

கோல முடிக்குக் குளிர்ச்சிதரும் – ஞாலமதில்

மெத்தவுமே சுக்கிலத்தை விருத்திசெய்யும் தப்பாமற்

சுத்த மதிமுகத்தாய் ! சொல்

அகத்தியர் குணவாகடம்

மருத்துவ குணம் – நாக்கு வெடிப்பு, பிரமேகம் தாது நட்டம் இவைகளுக்கு உள்ளுக்கும்; பல் ஆட்டம்,கால் வெடிப்பு இவைகளுக்கு மேலுக்கும் உபயோகிக்கலாம்  .விழுதைக் கொண்டு பல்துலக்கப் பல்லிறுகும் வயிற்று உளைச்சலைப் போக்கும்.

“ஆலும் வேலும் பல்லுக் குறுதி

நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி “

பழமொழி

     இதைச் சுட்டுச் சாம்பலாக்கி, நல்லெண்ணையில் கலந்து கரப்பானுக்குப் பூசக் குணமாகும். ஆலம்பழுப்பிலையை அரிசிப் பொரியோடு சேர்த்துக் கஷயமிட்டுக் கொடுக்க அதிவேர்வையை உண்டாக்கும்.

ஆலம் விதை –

செயல் –

     உரமாக்கி -------------- tonic

     மலமிளக்கி ----------- laxative

மருத்துவகுணம் –

     இதைக் கஷயமிட்டு வாய் கொப்புளித்துவர வாய்ப்புண் வாய் நாற்றம் நாவேடிப்பு ஈறுப்புண், இவைபோம் விரனங்களைக் கழுவவும் இதை உபயோகப்படுத்தலாம்.

     பட்டையை இடித்து பத்து மடங்கு ஜலம்விட்டு நாராக ஊறவைத்து எடுத்துக் கஷாயத்தை உள்ளுக்குக் கொடுத்துவர மதுமேகம் நீங்கும்.

ஆல்வேர்ப்பட்டை –

மருத்துவகுணம் –

     இதை முறைப்படிக் கஷயமிட்டுப் பாலுடன் சேர்த்துக் கொடுக்க மேக வெள்ளை நீங்கும்

     மேற்படிக் கஷயத்தைத் தனியாக வெளிப்பிரயோகமாகவும் உபயோகிக்கலாம்.

ஆலிலை –

மருத்துவ குணம் –

     இலையை வதக்கி மேகக்கட்டிகளுக்கு வைத்துக் கட்டலாம். இதனால் கட்டி உடைந்து சீழ் நீங்கும்

ஆலமொட்டு –

மருத்துவகுணம் –

     இதைப் பால், சர்க்கரை முதலியவற்றோடு சேர்த்து வயிற்று உளைவுக்கு கொடுக்க நீங்கும்

ஆலம்பழமும் – வேர்க்கொழுந்தும் –

மருத்துவகுணம் –

 

     இவை சுக்கிலத்தைப் பலப்படுத்தும்

ஆலங்குச்சி –

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி