ஆ - வரிசை ஆல்வள்ளிக் கிழங்கு
ஆல்வள்ளிக் கிழங்கு – ALVALLIK KILANGKU
வேறுபெயர் – மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு
JATROPA
JANIPA MANIHOL – MONIHOT UTILISSIMA
இது தென்னிந்தியாவில் மலையாளம்
திருவிதாங்க்கூரிலும் வடஇந்தியாவில் அசாமிலும் பயிராகும். தென்பிரேசிலிலும் (BRAZIL ) கிடைக்கும்.
மருத்துவ உபயோகம் –
கிழங்கு, இதில் கைப்பு சுவையுள்ளதும்உண்டு ஆனால் இந்தியாவில் கிடைப்பது
இனிப்புடையதேயாகும்.
சுவை – இனிப்பு,
வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.
செயல் – உரமாக்கி –
tonic
மருத்துவ குணம் –
இக் கிழங்கை உண்பதால் பித்த வாத தொந்தத்தையும் அக்கினி மாந்தத்தையும் உண்டாக்கும்.
பித்தங் கலந்த பெருவாய்வை யுண்டாக்கும்
மெத்தஅணல் மந்தத்தை மேலேளுப்புஞ் – சுத்த
இரவள்ளிக் கொண்டகுழ லேந்திழைஎ ! இந்த
மரவள்ளிக் கந்தமென வை
--- அகத்தியர் குணவாகடம்
ஆயினும்
மிகவுழைப்புடைய ஏழைமக்களுக்கு இது முக்கிய ஆகாரமாயிருக்கிறது. உடலைப் போஷிக்கும்
தன்மை இதில் இருப்பதால், தீபன சக்தி அதிகரித்து உள்ளவர்கள், இதை பச்சையாகவே
தின்பார்கள், தீபன சக்தி குன்றியவர்கள் இதை வேகவைத்துத் தனித்தேனும், வெல்லம்
சருக்கரை செர்த்தேனும் தின்பார்கள்.
இதை பச்சையாகவேனும் வேகவைத்துத் தோலையுரித்தேனும்
அல்லாது நன்றாய் வெய்யிலில் உலர்த்தி மாவாக்கிக் கஞ்சிசெய்து (சிலர் சருக்கரை பால்
சேர்த்தும் ) குடிப்பார்கள் இக் கஞ்சியை பால் இல்லாக் குழந்தைகளுக்கும் கொடுத்து
குழந்தைகளை வளர்ப்பது ஏழைமக்களின் வழக்கம்


Comments
Post a Comment