ஆ - வரிசை ஆவாரை
ஆவாரை – AVARAI
வேறு பெயர் – ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகரி,
ஆகுலி, தலபோடம்
தாவரவியல் பெயர் – CASSIA AURICULATA
ஆங்கிலப் பெயர் – THE TANNERS – CASSIA
இது
இலங்கை மத்தியமாகானம், தென்னிந்தியா, மேற்கரை நாடு இவ்விடங்களில் ஏராளமாய்ப்
பயிராகும்
மருத்துவகுணம் –
இலை,
பூ, பட்டை, விதை, வேர், பிசின்.
சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு –
இனிப்பு
செயல் –
இலை, பூ, பட்டை –
துவர்ப்பி
– ASTRINGENT
உரமாக்கி
– TONIC
விதை –
குளிர்ச்சியுண்டாக்கி
----- REFRIGERNT
செந்நீர்
இளக்கி ------------- ATTENUANT
வேர் –
உடற்றேற்றி
---------------- ALTERATIVE
பொதுக்குணம் ---
ஆவாரைச்
சமூலம் – சர்வ பிரமேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.
சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீர்
எல்லா மொழிக்கும மெறிவகற்று – மெல்லவச
மாவாரைப் பம்பரம்போ லாட்டுந் தொழிலனங்கே!
யாவாரி மூலி யது.
தேரையர் குணவாகடம்
ஆவாரைப்
பஞ்சாங்கத்தின் குணம் –
ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர்,
என்னும் ஐந்து உறுப்புகளால் பிரமேக மூத்திரம், வெள்ளை, உட்சூடு, விரணம், வாதகிரகனி
அஸ்திதாதுகத சுரம், தாகம் இவைபோம்.
மோகத்தி னாலே விளைந்தசலம் வெட்டையனால்
ஆகத்தின் புண்ணோ டருங்கிராணி – போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங்கொள் அத்திசுரம் தாகமும்போம்
ஏவாரைக் கண்மடமாதே !
அகத்தியர் குணவாகடம்
ஆவரம்பூவின் குணம்
–
பிர்மேகநீர், வறட்சி, உடம்பிற்பூத்தவுப்பு,
கற்றாளை நாற்றம் இவைகளை நீக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும்.
தங்கம் எனவே சட்டத்திற்குக் காந்திதரும்
மங்காத நீரை வரட்சிகளை – அங்கத்தாம்
மாவைக் கற்றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம்பூ
அகத்தியர் குணவாகடம்
ஆவாரைப் பிசின்
வெகுமூத்திரத்தையும் பிரமேக ரோகத்தையும் வாத கிரிச்சரத்தையும் போக்கும்.
பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும்
வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் – தருநீர்மை
பூணுமே நிக்கமலப் பொன்னே ! பிடகரெலாம்
பேணுமே காரிப்பி சின்
அகத்தியர் குணவாகடம்
மருத்துவகுணம் –
குளிர்ச்சியுடைமையால் வெயிலில் வெகுதூரம் நடப்போர்கள் இவ்விலைகளைக் கையில்
பிடித்துக் கொண்டும் தலையின்மீதுப் பரப்பி அதன்மீது தலைப்பாகையிட்டும் நடக்க
வெய்யிலின் வெப்பந் தோன்றாது; நடையும் பரியும்.
பூ –
பூவைச் சமைத்துச்
சாப்பிட கற்றாழை மனம், பிரமேக நீர், உடம்பில் உப்புப் பூத்தல் வறட்சி(தாகம்)
சமனப்படும்
வதக்கி
கண்நோய்க்கு ஒற்றிடமிடலாம்.
கஷயமிட்டுப்
பால்செர்த்துச் சாப்பிட, உட்சூடு தணியும் பூவுடன் பச்சைபயறு சேர்த்தரைத்து
நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
மணப்பாகு செய்து சாப்பிட,பிரமேகம்
மூத்திரரோகம் ஆண்குறி எரிச்சல் நீங்கும் சொப்பன ஸ்கலிதமும் போம்.
பெரும்பாட்டை நிறுத்த வடஇந்திய பெண்கள் பூவை
யோனிக்குள் செலுத்திக் குணம் பெறுகிறார்கள்.
பட்டை –
கஷாயமிட்டு வாய் கொப்பளிக்கவும் ஆசனவழியாக
பீச்சவும் உபயோகிக்கலாம்.
விதை –
இதை நன்றாய்ப்
பொடித்து நீர் விட்டரைத்துக் குழப்பிக் கண்சிவப்பு நீங்க கண் இரைப்பை மீது
பற்றிடலாம். விதியின் தோளைப் போக்கி நுண்பொடி செய்து கண்ணின் தூவியாவது அல்லாது
தேங்காய் எண்ணெய், எண்ணெய் இவற்றில் ஒன்றில் குழைத்துக் கண்நோய்களுக்கு உள்ளிலிட்டாவது
சுகம் பெறலாம்.
இதை உரைத்துக்
கண்ணிலிட சீபிடிக்கும் கண்நோய் தீரும்
பிசின் –
இதில் 1
முதல் 2 1/2விராகன் எடை நீரில் கலந்து குடித்துவர வெகு மூத்திரம். பிரமேகம், வாத
கிரிச்சரம் சாந்தமாகும்
பஞ்சாங்கம் –
இவைகள கஷாயமிட்டுச் சாப்பிட்டுவர மேகநீர்,
ஆண்குறி எரிவு,வெகு மூத்திரம் தணியும் வேண்டுமான்னால் கஷாயத்துடன் கற்கண்டு
பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட பஞ்சாங்கத்தை கஷாயம் செய்து
அதற்க்கு நேர் பணங்கற்கண்டு தக்க அளவில் வால்மிளகு, ஏலக்காய் கூட்டி மணப்பாகு
செய்து இதை பால் நீர் இவைகளில் ஒரு உச்சி கரண்டி அளவு கூடிச் சாபிட தேகபுஷ்டி,
தாது விருத்தி உண்டாகும், மூத்திரத்தில் மது குறையும். பஞ்சாங்கத்தைச் சூரணம்
செய்து வேளைக்கு கால் பலம் வீதம் தேனில் குழைத்து உன்ன மேக நீர் குறையும்.
வேர் –
வேர்ப்பட்டையைக் கஷாயம் செய்து அதற்க்கு நேர்
வெள்ளாட்டுப்பால் அல்லாது பசும்பால் என்ணெய் கூட்டித் தைலம் செய்து தலை முழுகிவர
மேகநீரால் வேதனைப் படுபவர்களின் வெப்பந்தனியும்.கண்குளிரும்,


Comments
Post a Comment