ஆ - வரிசை ஆமணக்கு

 



ஆமணக்கு – Amanakku

வேறுபெயர் – எரண்டம், சித்திரம், தலரூபம்

Ricinus Communis

English – Castor oil plant

ஆமணக்கு என்னும் பெயரால் வழங்கும் செடிகள் இருவகைப்படும் ஒன்று பெருஞ்செடி, மற்றொன்று குத்துச் செடி வகுப்பில் சேரும்

சிருமரவகுப்பு (பெருஞ்செடி) 

இப்பிரிவில் சேர்ந்தவை 1) சிற்றாமணக்கு, 2) பேராமணக்கு, 3) செவ்வாமணக்கு ஆகும். இம்மூன்றும் பொதுப் பெயர் ஆமணக்கு

இது முன்கூறிய சிற்றாமணக்கு, பேராமணக்குகலைச் சிறப்பாகவும் செவ்வாமணக்கைப் பொதுவாகவும் குறிக்கும். இச்செடிகளின் பொது, சிறப்புப் பெயர்களும் அவைகளின் உறுப்புகளும் அடியில் கண்ட பெயரால் வழங்கும்

குத்துச்செடி வகுப்பு

இவ்வகுப்பில் சேர்ந்தவை அ) காட்டாமணக்கு, ஆ) எலியாமணக்கு

English – Castor oil plant

Telunku – Amudapu chettu, Malayalam – Avanakku, Kannadam – Harala gida, Sanskirit – Yeranda – vrikshaha 

பேராமனக்கு – Peramanakku

Recinus Inermis

இது படுகையாமணக்கு என்றும் வழங்கும் (ஆற்றங்கரை ஓரத்தில் பயிரிடப்படுவதால் )

ஆமணக்கு என்னும் மொழியின் முன் பெரிய என்கிற சொல்லைக் கூட்டி பேராமணக்கு என்று வழங்குவது போல இதன் இலைக்கும் விதைக்கும் வெறுக்கும் நெய்யுக்கும் முன் பெரிய என்கிற சொல்லை அமைத்து வழங்குகின்றனர்.

செவ்வாமணக்கு – Chevvamanakku

Recinus Tanarius

இது இந்தியா முழுதும் எளிதில் கிடைக்கும்.

மருத்துவ உபயோகப்பகுதி – இலை,வேர்,விதை.

சுவை – கசப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு

செயல்

பால்பெருக்கி – Galactagogue

வாதமடக்கி – Anti – vatha  

சிற்றாமணக்கு

இது இந்தியா முற்றிலும் எளிதில் கிடைக்கக்கூடிய செடி

மருத்துவஉபயோகப்பகுதி – இலை,வேர்,விதை.

இலை சுவை – கசப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு

செயல்

பால்பெருக்கி – Lactagogue

வாதமடக்கி – Anti – vata  

மருத்துவகுணம் இலையைக் கசாயம் செய்து அல்லது இலையில் சாறு எடுத்து உள்ளுக்குக் கொடுத்து இவவிலையை போட்டு காய்ச்சிய வேன்னிறாள் ஒத்தடமிட்டு இவவிலையை அரைத்து பற்றிட்டு அல்லது வதக்கிக் மார்பில் கட்டிவர பெண்களுக்கு பால் சுரக்கும்

இலைகளை சிறுக அரிந்து சிற்றாமணக்கு நெய் விட்டு வதக்கி சூட்டுடன் வேதனையுடன் கூடிய கீல்வாதங்களுக்கு வாத ரத்த வீக்கங்களுக்கும் ஒற்றிடமிடலாம். இதனால் வலி குறையும்.

சிற்றாமணக்கு இலையும், கீழாநெல்லி இலையும் சமமாக எடுத்து அரைத்துச் சிறு எலுமிச்சங்காய் அளவு மூன்று நாளைக்கு காலையில் மாத்திரம் கொடுத்து நாலாம் மூன்று நான்கு முறை மலம் போகும் அளவு சிவத்தைச் சூரணம் கொடுக்க காமாலை தீரும்

மலக்கட்டும் வயிற்றுவலியும் உள்ள காலத்தில் அல்லது மாதவிலக்கு கட்டு அல்லது தடைப்பட்டு இருக்கும் பொது அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு எண்ணெய் இலேசாக தடவி அதன் மேல் சிர்ரமனக்கு இலையை வதக்கி பொறுக்கக் கூடிய சூட்டில் போட்டுவர குணப்படும்

வேர்

சுவை – கசப்பு,வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.

செயல்

வாதமடக்கி – Anti – vatha

மருத்துவகுணம் – வாதத்தை தன்னிலைப் படுத்தச் செய்யும் கசாயங்களில் தைலங்களில் இதன் வேரைச் சேர்ப்பது வழக்கம்.

தேரையர் தைலவருக்குச் சுருக்கத்தில் உள்ள வாதத்தைலம், மூலரோக நிற்குண்டி தைலம், சுக்குத் தைலம், இவைகளில் மேற்ப்படி வேர் வருவதை கவனிக்கலாம்

வேரைக் குடிநீர் செய்து அதில் கொஞ்சம் பூநீர் சேர்த்து காலை மாலை இருவேளையாக மூன்று,நான்கு நாள் கொடுக்க பக்கசூலை குணமாகும்.

விதை

சிற்றாமணக்கு வித்தின் ஓட்டை நீக்கி பருப்பைப் பச்சையாய் அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய் நசுக்கி அனலில் வதக்கியாவது கட்டிகளின் மீது வைத்துக் கட்டிவர கட்டிகள் எளிதில் பக்குவம் அடைந்து உடையும்

இவ்விதத்தில் பருப்பை ஒன்றிரண்டாய் பொடித்து சட்டியில் விட்டு வதக்கி சீலையில் முடிந்து ஒர்ரிடமிட வயிற்றுவலி மூத்திரப்பை தாபிதம் கல்லடைப்பு,சதையடைப்பு, நீரடைப்பு, பக்கவழி, புறவுறுப்புகளில் காணும் வீக்கந் தணியும்

ஆமணக்கு நெய்

ஆமணக்கு வித்தில் இருந்து எடுக்கும் நெய் ஆமணக்கு நெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் என வழங்கும்

ஆமணக்கு விதையில் இருந்து இருவகையாக எடுக்கப்படும் அவை பச்சை எண்ணெய், இன்னொன்று ஊற்றின எண்ணெய் என்று வழங்கப்படும்

பச்சை எண்ணெய்

ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி இயந்திரத்தின் மூலமாக அழுத்தி வடியும் எண்ணெய் பச்சை எண்ணெய் என்று வழங்கும்

ஊற்றின எண்ணெய்

ஒரு அகண்டசாளில் நான்கு பங்கு நீர் விட்டு அதில் மேற்க்கண்ட பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து தீயிலிட்டு எரிக்க நெய் கக்கி நீர் மீது மிதக்கும் அதை அகப்பையால் முகந்து எடுத்து வேறு பாத்திரத்தில் சேர்த்து அதில் தங்கி உள்ள நீர் போகும் படி அனலில் வைத்து நீக்கியதே ஊற்றின எண்ணெய்.

குறிப்பு – நீருக்கும் பதிலாக இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றம் இல்லாதது. உடலுக்கு மிக்க நன்மை பயக்கும்

மேற்கண்ட பருப்புகளை சுத்தமான நீரில் ஊறவைத்து கழுவி எளிதாக வறுத்து இடித்து மேல்கண்ட முறையில் கூரியபடி காய்ச்சியும் எடுப்பார்கள்

சிறு முத்துக்களில் இருந்து எடுக்கப்படும் நெய்க்கு சிற்றாமணக்கு எண்ணெய் அல்லது சிற்றாமணக்கு நெய், சிறு முத்துக் கொட்டை எண்ணெய் கொட்டை முத்து எண்ணெய் ஏரண்டத்து ர்ந்ன்றி என்றும் வழங்கப்படும்  

பெரும் முத்துக்களில் இருந்து எடுக்கப்படுவதற்கு பெருமுத்துக் கொட்டை எண்ணெய் , விளக்கெண்ணெய் என்றும் பெயர்கள் வழக்கத்தில் வந்திருக்கின்றன

மேற்கண்ட இருவகை முத்துக்களின் எண்ணெயில் எது மலினமற்று தூய்மையாய் வைக்கோல் நிறமாயும் நன் மணத்துடன் இருக்கிறதோ அதுவே உயர்ந்தது. எது அதிக மஞ்சள் நிறமாயும் மிகு கனமாயும் தேவிட்டலாகவும் இருக்கிறதோ அது தாழ்ந்தது.

செயல்

மலமிளக்கி – L axative

வரத்சியகற்றி – Emollient

பொதுக்குணம் – ஆமணக்கு எண்ணெய் – மலத்தை கழிக்கும். கோரவாதம்,குண்மம் குடலேற்றம் தேகம் – கண், மூக்கு, செவி, வாய் இவைகளில் உண்டாகிற எரிச்சலை நீக்கும் தாதுவிருத்தி உண்டாக்கும் உடலைப் பொன்னிறமாக்கும்

ஆமணக்கு நெய்யால் நலமுண்டா மியாவர்க்கும்

பூமணக்கும் மேனி புரிகுழலே! – வாய்மணக்கக்

கொள்ளில் வயிருவிடுங் கோரமுள்ள வாயுவறும்

உள்ளில்வரு குன்மம்போ மோது

------- அகத்தியர் குணவாகடம்

*********  

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி