ஆ வரிசை - ஆடுதீண்டாபாலை
ஆடு தீண்டாப்பாளை – ADU THEENDA PALAI
(BRATEATED BIRTH WORT)
வேறு பெயர் – ஆடுதின்னாப் பாளை, ஆடு தொடாப் பாளை, பங்கம் பாளை, பாளை,
புழுக்கொல்லி, மரறியுளா மூலம்.
ஆங்கிலப் பெயர் – WORM –
KILLER, INDIAN BIRTHWORT
தாவரவியல் பெயர் – ARISTOLOCHIA BRACTEATA
இது
பூண்டு இனத்தைச் சேர்ந்தது. தெனிந்தியாவில் திருவாங்கூரிலும் கீழக்கரையைச் சேர்ந்த
நாடுகளிலும் மணற்பாங்கு, அல்லது நஞ்சை நிலங்களிலும் ஏராளமாக கிடைக்கும். இதன் இலை
சாம்பல் நிறமாக இருக்கும்.
மருத்துவ பகுதி – இலை, விதை, வேர், சமூலம்.
சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.
புழுக்கொல்லி – ANTIHELMINTIC
ருதுவுண்டாக்கி – EMMENAGOGUE
வெப்பமுண்டாக்கி – STIMULANT
உரமாக்கி – TONIC
நீர் மலம் போக்கி – PURGATIVE
உடற் தேற்றி – ALTERATIVE
முறை வெப்பகற்றி – ANTIPERIODIC
குணம் –
மலக்கிருமிகள்,
வாத சிலந்தி, பூச்சி விடம் கருங் குட்டம், கரப்பான், வாத ரோகம், பன்றி மாமிசத்
தோல் போன்ற ( கஜசர்மம் என்ற பெரும் உண்டு ) ஆகிய நோய்களைப் போக்கும். ஆடுதீண்டாப்
பாளையால் நீங்கும். பலமும், சுக்கிலமும் உண்டாகும்.
பாடல் –
ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வான் சிலந்தி
நீடுகருங் குட்டம் நிறை கரப்பான் – ஆடிடச் செய்
என்பது வாய்வும் இகல் குட்டமுந் தீரும்
திண்பெரு நற்றாதுவுமாந் செப்பு
--- அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் –
மேற்கண்ட
நோய்களுக்கு கால் பலம் நிறையுள்ள இலையை கால்படி வெந்நீரில் இரண்டு மணி நேரம்
ஊறவைத்து வடிகட்டி 1/8 வீதம் ¼ ஆழாக்கு வீதம் கொடுக்கலாம்.
உலர்ந்த இலையை மேற்கண்ட படி ஊறல் கஷாயம் செய்து
கொடுக்கு கிருமிகள் போம். விதைகளைப் பொடித்து ஒரு விராகன் எடை எடுத்து அரை முதல்
ஒரு பலம் சிற்றாமணக்கு எண்ணெயில் கலந்து கொடுக்க வயிற்றுவலி சூதகதடை, சூதகக் கட்டு
முறை சுரம் பிரசவவேதனை இவைகளை நீக்குவதுடன் மலக் கிருமிகளையும் வெளிப்படுத்தும்.
வேர் – வேரைஅரைத்து அரை முதல் ஒரு விராகன் எடை
கொடுக்க பாம்பு விடம் முறியும் இதர விடங்கள் நீங்கும்.
வேர்த்தூளை ஒன்று முதல் ஒன்றரை விராகன் எடை
வீதம் தனியே வெந்நீருடன் கொடுக்க பிரசவ வேதனையைத் தூண்டும்.
சமூலம் – இப் பூண்டின் சமூலத்துடன் நேர் பாகம்
நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவத்தில் எடுத்து வடிகட்டி கருங்குட்டம்
கரப்பான் இவைகளுக்கு பூசிவரலாம்.
சமுலமும் சேர்த்து அரைத்து ஒரு தேங்காய் அளவு எடுத்து உருட்டி ஒருபடி நல்லெண்ணெயில் விட்டுக் காய்ச்சி வடிகட்டி கால் அரை பலம் வீதம் ஐந்து நாள் கொடுத்து ஐந்து நாள் விட்டு நாற்பது நாள் கொடுக்க ஆரம்பக் குட்டம், தடிப்பு பெரிய குட்டம், நீங்கும் உப்பு, புளி ஆகாது.



Comments
Post a Comment