ஆ - வரிசை ஆணைக் குன்றி
ஆணைக் குன்றி மணி – ANAIK
– KUNRI
வேறுபெயர் – மஞ்சாடி
தாவரவியல் பெயர் – ADANANTHERA PAVONINA LINN
இது இந்தியாவில் எல்லாவிடங்களிலும் பயிராகிறது. மரவகுப்பைச் சேர்ந்தது.
குணம் – இதன்
இலையைக் கஷாயம் செய்து நாட்பட்ட வாதரோகங்களுக்கு கீல்பிடிப்புகளுக்கும்
கொடுக்கலாம். மேலும் இதனால் வயிற்றிலிருந்தாவது, ஆண்குறியிலிருந்தாவது,
வெளிப்படும் இரத்தம் நிற்கும். சிறிய அளவில் நாட்பட உபயோகிக்க வீரிய விர்த்தியை
உண்டு பண்ணும்.
இதன் வேர் வாந்தியை உண்டு செய்யும் மருந்துகளில் ஒன்றாகும். இதன் விதையை
அரைத்துக் கட்டிகளுக்குப் பற்றிட அவைகள் சீக்கிரத்தில் கரையும்.
********



Comments
Post a Comment