ஆ - வரிசை ஆணைப்புளிய மரம்






ஆணைப்புளிய மரம் – ANAIPPULIYAMARAM

வேறு பெயர் – ஆணைப்புளி, சீமைப்புளி, பப்பாப்புளி, பூரிமரம்

தாவரவியல் பெயர் – ADANASONIA DIGITATA, MALVACEAE

ஆங்கிலப்பெயர் – BAODAB

இது ஆப்பிரிக்கா தேசத்திற்கு உரியது. இந்தியாவிலும் பயிராகிறது. இதன் புளி அழுக்குப் படிந்த நிறமாயிருக்கும். இலங்கை போன்ற இடங்களில் பயிராகின்றவை 60 – 70 அடி உயர்முடையவை. இம் மரப் பழத்தின் ஓடு சந்நியாசிகள் நீரை மொண்டு உபயோகிக்கக்கூடிய அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இம்மரத்தின் கீழ் பண்டை காலத்தில் கோரக் (Gorakh) என்ற ஒரு சந்நியாசி தனது சீடர்களுக்கு உபதேசஞ் செய்தாரென்றும் அதனால் இதற்கு கோரக் என்ற ஒரு பெற்யரும் உண்டென்பருமுளர்.

மருத்துவ குணா பகுதி – இலை,பட்டை,பழச்சதை, வித்து.

சுவை – இனிப்பு,புளிப்பும், வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.

செயல் – வாதமடக்கி – Anti vatha

இலை –

மருத்துவ குணம் – இலைச்சாற்றில் சுக்கையரைத்துக் கீல்வாதம், பரங்கிப்புன் முதலிய புன்களுக்குப் பூசலாம். இலையை அவித்துக் கைகால் வீக்கம், வலிகளுக்குச் சூட்டுடன் ஒற்றிடமிட்டுப் பிறகு அதையே கட்டலாம் இலையை உலர்த்திப் பொடிசெய்து உள்ளுக்குக் கொடுக்க அதிவியர்வையுண்டாவது குறையும்.

பட்டை

செயல்

வெப்பகற்றி – Febrifuge

மருத்தவகுணம் – பட்டையை இடித்து எடுத்த ஒரு பங்கிற்கு,இருபது பங்கு நீர் சேர்த்து விதிப்படி குடிநீர் செய்து, 25 – 30 ml வீதம் கொடுத்துவர முறை சுரம் நீங்கும்.

குறிப்பு --- இப் பட்டையின் சத்தை (Adansonin) குவைனாவிற்க்குப் பதிலாக உபயோகிக்கின்றார்கள்.

பழச்சதை

செயல்

சிறுநீர்ப் பெருக்கி – Diuretic

துவர்ப்பி – Astringent

உள்ளழலாற்றி – Demulcent

இப் புளிக்கு சீதபேதியை போக்கும் குணமுண்டு. இத்துடன் அத்திப்பழம் சேர்த்து மணப்பாகு செய்து கொடுத்துவர உடலுக்கு உற்சாகம்,தரும் உடலில் காணும் வெப்பத்தை தணிக்கும் சுரத்தில் காணும் தாகத்தை போக்கும். சயநோயில் இரவில் உண்டாகும் வியர்வையை தடுக்கும். வாய்கசப்பு புளியேப்பம், முதலியவை நீங்கும்

விதைப் பருப்பு

இதன் பருப்பை அரைத்து மோருடன் கலந்து குடிக்க அதிசாரம் சீதபேதி குணப்படும்

********  

 .   

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி