இ -- வரிசை இசங்கு
இசங்கு – ISANGU
வேறுபெயர் –
குண்டலி, கோல், சங்கங்குப்பி, முத்தாபலம், பீச்சங்கன், பீனாசங்கங் குப்பி
Clerodendron Inerme, Gaertn
Telunku – Pishinika, Malayalam – Shangam – kuppi,
Sanskirit – Kundali
இது
இந்தியாவிலும் இலங்கையிலும் கடல்கரை ஓரங்களில் வளர்கின்றது.
மருத்துவ
உபயோகப்பகுதி – இலை,வேர்.
சுவை – கசப்பு,
வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.
செயல்
உடல்தேற்றி – Alterative
வெப்பகற்றி – Febrifuge
உரமாக்கி – Tonic
குணம் –
சங்கங்குப்பிக்கு அரைக்கடுவன், கிரந்தி, கருங்குட்டம், வாதப்பிரமேகம்,
கருப்பத்தில் உண்டாகிய கருங்கிரந்தி, செவ்வாப்பு கட்டி, வெள்ளை, சொறி, சிரங்கு,
சூலை, மகா வாதம், சிலேத்தும தோடம், வறட்டிருமல் சர்ப்பவிசம், இரத்தக் கிருமி
ஆகியவை போகும்
கரப்பான்
கிரந்தி கருங்குட்ட ரோகம்
உரப்பான மேகம்
ஒழியும் – கருவாம்
கருங்கிரந்தி
செவ்வாப்புக் கட்டிகளு மேகும்
அருஞ்சங்கங்
குப்பிக் கறி
வெட்டை
சொறிசிரங்கு வீரிவ ருஞ்சூலை
துட்டவர
தங்கபந்து ணுக்கிருமல் கெட்டவிடம்
அங்கங்கொள்
பூச்சியிவை யாவும்போம் பித்தமுறுஞ்
சங்கங்குப்
பிக்கெனவே சாற்று
-----
அகத்தியர்குணவாகடம்
மருத்துவகுணம்
– இலையைக் கசக்கிப்பிழிந்த சாறு அல்லது பச்சசை வேரை பிழிந்த ரசத்தில், காலை மாலை
இருவேளை 25 ml – 30 ml கொடுத்துவர
மேகரோகம், கண்டமாலை, குணப்படுவதுடன், இதையே சிலநாள் வரை சாப்பிட்டுவர. இரத்தம்
சுத்தப்பட்டு உடல் வலுக்கும்.
ஒரு பங்கு
இலைக்குப் பத்துப் பங்கு நீர் சேர்த்து குடிநீர் செய்து 25 ml – 3. Ml வரை
விடாச்சுரம், விட்டு விட்டு வருஞ் சுரங்களும் நீங்கும்
இலையை
நீரிலிட்டு காய்ச்சி அந்நீரைக் கொண்டு முழுகிவர சொறி சிரங்கு பயித்தியம்
குணமாகும்.
இலையை ஆமணக்கு
நெய் விட்டு வதக்கிக் கட்ட அரையாப்பு கரையும்
இலைச்சாறும்
சிற்றாமணக்கு எண்ணெய்யும் சம அளவு கலந்து காய்ச்சி பக்குவத்தில் எடுத்து வடிகட்டி
காலை மாலை 15 ml – 25 ml வரை கொடுக்க
வெட்டை, கிரந்தி, கரப்பான், சொறி சிரங்கு,பிரமேகம், கிருமிகள் நீங்கும் உப்பு புளி
நீக்கவும்.
வேர்
வேரை
எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாதப் பிடிப்பு முதலிய வாத நோய்களுக்கு மேலே தடவி
ஒத்தடம் கொடுக்கலாம்.
வேரை உலர்த்தி
பொடி செய்து 1 gm – 3 gm வரை கொடுக்க
சொறி சிரங்கு சுரம் நீங்கும்.
இது
கொய்னாவுக்கு ஈடானது .
******


Comments
Post a Comment