ஆ - வரிசை ஆடையொட்டி
ஆடையொட்டி – ADAIYOTTI
தாவரவியல் பெயர் –
THIRUMFETTA – RHOMBOIDEC
இது இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் சாதரணமாய்
படரும் பூண்டு இப்பூண்டு உள்ள இடங்களில் உட்க்கார்ந்தால் இதன் காய்கள் ஆடையில்
ஒட்டிக் கொள்ளும் இதனால் இதற்கு இப் பெயர் உண்டாயிற்று.
மருத்துவ பகுதி – இலை பூ காய்
செயல் – துவர்ப்பி – ASTRINGENT
உள் புன்னாற்றி ----- DEMULCENT
வழக்கும் குணமும் – இலையை அரைத்து சருக்கரை
சேர்த்து நீரிற் கலக்கிக் கொடுக்க வெட்டை தணியும்
இலையையும் காயையும் அரைத்து நீரிற் கலக்கி
மூத்திர தாரையுள் பீச்ச மேற்படி ரோகம் நீங்கும். இதன் இலையையும் பட்டையையும்
அரைத்து நீரிற் காச்சி உள்ளுக்கு கொடுக்க அதிசாரம் அஜிரனபேதி சீதபேதி குணப்படும்.


Comments
Post a Comment