ஆ வரிசை ஆணைக் கற்றாழை
ஆணைக் கற்றாழை - Anai kartazhlai/
வேறு பெயர் –
இராக்காசி மடல் ,ரெயில்வே கற்றாழை
Agave Americana.
Tel – Rakashi – Mattalu , Malayalam – Panam –
Katrazha, Kanadam – Bhuttale, Sanskirit – Kanatla,
இது, அமெரிக்காவில்
இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்காலம் இது குறிஞ்சி,
முல்லைத் திணைகளில் ஏராளமாய் பயிராகின்றது. இது மடல் மடலாக விரிந்து அகலத்தில் 4 – 6 அங்குலமும், நீளத்தில் 2 அடி முதல் 5 – 6 அடியும், மடலின் இரு
புறத்திலும் முட்களும் உயரத்தில் 12 அடிக்கு மேலும் வளர்கின்ற படியாலும் இராகாசிமடல்
என்றும் இருப்புப்பாதையின் இருபுறமும் வைத்து வளர்க்கப்டுவதால் ரெயில்வே கற்றாழை
என்றும் பெயர் வழங்கினது போலும்
மருத்துவ உபயோகம் - மடல், வேர்.
சுவை – கைப்பு,
வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.
செய்கை – உடல்தேற்றி –
Alterative
சிறுநீர்ப்பெருக்கி - Diuretic
குணம்
– நீர்க்கட்டை உடைத்தல், வீக்கத்தை கரைத்தல்
ம
மருத்துவ – குணம் – இதன் மடலை, அனலில்வாட்டிச் சாறுபிழிந்து, அதில் போதுமான அளவு கேழ்வரகு மாவைச் சேர்த்து குழம்பு பதம் வரும வரையில் காய்ச்சி, வீக்கமுள்ள இடத்தில் பற்றிட வீக்கம் கரையும்.



Comments
Post a Comment