ஆ - வரிசை ஆதண்டம்




ஆதண்டம் – ADANDAM

வேறுபெயர் – ஆதண்டன், ஆதண்டை, ஆதொண்டை, ஆதொண்டன், ஆதொன்டம், காற்றொட்டி, காத்தொட்டி, காத்தோட்ட, காகதுரத்தி.

தாவரவியல் பெயர் – CAPPORIS ZEYLANICA (C.HORRIDA)

இது கொடிவகுப்பிற் சேர்ந்தது தென்னிந்தியாவில் தோட்டங்களின் வேலிகளில் பயிராகும்

மருத்துவ பகுதி – காய்,வேர்

சுவை – சிருகைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு.

செயல் – தாது வெப்பகற்றி – SEDATIVE

பசிதீத் தூண்டி ------ STOMECHIC

குணம் – இதனால் மண்டைக் குடைச்சல் (கபாலாநோய்) வாத பீனிசம், தொண்டையிற் சேரும் கபம் வாதக் குடைச்சல் முதலியவை தீரும்

பாடல் –

மண்டைக்கு டைச்சலும் வாதத்தின் பீனிசம் போம்

தொண்டைக் கபமுந் தொலையுங்க்கான் – மிண்டுசெய்யும்

வாதக் கடுப்பகளும் மாதே ! ஆதொண்டைக்குப்

போதப் பல பிநிபோம் போம்

--- அகத்தியர் குணவாகடம்

மருத்துவ குணம் – கையைச் சமைத்தும் வர்ரளிட்டும், வழங்குவது தென்னாட்டு வழக்கு இதனால் மேற்கண்ட நோய்கள் தணியும்

வேர் – வேர்ப்பட்டையை மூன்று பலம் எடுத்து இடித்து அரை படி நீரில் போட்டுக் காய்ச்சி மூன்றாலாக்காக குறுக்கி வடிகட்டி மூன்று பங்கு செய்து நாள் ஒன்றுக்கு மூன்று முறையாக உட் கொள்ள அக்கினி மாந்தம் இரைப்பையின் தாபனம், வந்தி மார்புவலி குணமாகும் வேர் கிடைக்காவிட்டால் இலையைப் பயன் படுத்தலாம்.

இதன் வேரை எண்ணெயிலிட்டு காய்ச்சி தலை முழுகி வர பீனிசம் தொண்டைக்கட்டு வாதக் குடைச்சல், மண்டைக்குடைச்சல் தீரும் இது கிராம வாசிகள் வழங்கும் சிறு தைலங்களில் ஒன்று. 

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி