ஆ -- வரிசை ஆயில் பட்டை


ஆயில் – AYIL

இது பூதிகம் என்றும் வழங்கும்

தென் இந்தியாவில் பயிராகின்ற மரவகுப்பில் ஒன்று

மருத்துவகுணம் பகுதி  – பட்டை

செயல் –   முதோடம்அகற்றி – Anti – tritosha

           வெப்பகற்றி ------------ Febrifuge

மருத்துவ குணம் – வாதாதி முத்தொடங்களையும், பழைய சுரத்தையும் போக்கும்.

ஆயி லுரியை யடுநீருணித்திய மெய்

யாயிலு ரியையெனிலாவியிசை – யாயில்

வரிசையாக் கற்குநிகர் (வல்லியட்டுண் மெய்க்கு

வரிசையாக் கத்தையுறு வை)

-    தேரையர்

-    மருத்துவ குணம் – இதன் பட்டையை, நிழலிலுலர்த்தி இடித்து தூள் செய்து அதில் ஒரு பழம் எடுத்து ஒருபடி நீர் விட்டு ஒருநாள் முற்றும் சூரியபுடம் வைத்து பிறகு திரிகடுகுத் தூள் வகைக்கு அரைக்கால் பழம் சேர்த்து கமலாக்கினியாக எரித்து முக்கால் ஆழாக்காகச் சுண்டினபின் இறக்கி வைகட்டிக் குடித்துவர வாதாதி முதொடங்கள் கோபிக்காமல் தத்தம் நிலையில் நிற்கும். சுரத்தையும் போக்கி உடலைத் தாயைப் போல் பாதுகாக்கும்.

-    “ஆயிலகுபுனலனலையடுநெறி “ என்கிற வாக்கியத்தாலும் அறிக

-    தேரையர்

முத்தோடத்தைப் போக்கக் கூடிய தைலங்களிலும்,   வாதகோபத்தைத் தணிக்கக் கூடிய தைலங்களிலும் இப்பாட்டை சேரும்.   

Comments

Popular posts from this blog

அ - வரிசை - அன்னாசிப்பழம்

அ -வரிசை - அந்திமல்லி

அ - வரிசை - அலரி