ஆ - வரிசை ஆளிவிதை
ஆளிவிதை – Ali – verai
வேறுபெயர் – ஆழிவிதை,
ஆளிவிரை
Lepidium sativaum
Telungku – Adeli, Malayalam – Alivitta, Kanadam – Alibija, Sanskirit – Chandrasura
இது இந்தியாவில்
பயிராகின்றது
இலை
செயல்
வெப்பமுண்டாக்கி – Stimulant
சிறுநீர் பெருக்கி -- Diuretic
குணம் – உடலுக்கு பலம்
தரும், நீர்க்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும்
மருத்துவகுணம் –
இலையைப் பச்சடி செய்து உண்ண, மேற்கண்ட குணங்களைப் பெறலாம்
பூ
செயல்
உரமாக்கி – Tonic
குணம் – இளைத்த
உடலுக்கு பலத்தை உண்டாக்கும்.
மருத்துவகுணம் –
இனிப்புள்ள பச்சடிகளில் பூவைத் தூவி சாப்பிடலாம்.
விதை
செயல்
உடல் தேற்றி – Alterative
மலமிளக்கி – Aperient
காமம் பெருக்கி – Aphrodisiac
அகட்டுவாய்வகற்றி – Carminative
உள்ளழலாற்றி – Demulcent
சிறுநீர் பெருக்கி – Diuretic
ருதுவுண்டாக்கி – Emmenagogue
பால் பெருக்கி – Galactagogue
குணம் – அசீரணம்,சீதபேதி,
அசீரனபேதி, இடப்பக்க ஈரல் வீக்கம், வயிற்றுப் பொருமல், விக்கல், சருமரோகம்,
கபநோய்கள், வெள்ளைபடுதல், மூலம், ஆகியவை நீங்கும். பாலை சுரப்பிக்கும், கருவைக்
கரைக்கவும் வெளித்தள்ளவும் செய்யும் உடல் சூட்டை தணிக்கவும் உபயோகமாகும்.
வீக்கம் அதிவாந்தி மேனி
வலிவாயுவுந்
தூக்குநரம் பின்குத்தல்
தொல்லழை – ஒக்காளம்
ஆளிவிதை தன்னால் அறி
--- அகத்தியர்
குணவாகடம்.
மருத்துவகுணம் –
மேற்கண்ட குணங்களைப் பெறுவதற்கு ஒரு பங்கு விதைப் பொடிக்கு இருபது பங்கு நீர்
சேர்த்து குடிநீராக்கி அல்லது ஒரு பங்கு பொடி செய்த விதையை பத்துப் பக்கு
குளிர்ந்த நீரில் நன்றாய் ஊறவைத்து எடுத்த நீரில் முப்பது மில்லி நாள் ஒன்றுக்கு இரண்டு,மூன்று
முறை கொடுத்துவரலாம்
ஒருபங்கு பொடி செய்த
விதையை எட்டுப் பங்கு நீரில் ஊறவைத்து கொதிக்க வைத்து சுமார் 25 30 ml வீதம் அடிக்கடி கொடுத்துவர விக்கல்
நீங்கும்
விதையைப் பால்லிட்டு
காய்ச்சி கொடுக்க பால் சுரக்கும் ஆனால் இளம் கறுப்பினால் சாப்பிட்டால் கருவைக்
கலைத்துவிடும்.
விதையின் சூரணத்தை
சருக்கரையுடன் கலந்து கொடுக்க அசீரணம் அசீரனபேதி, சீதபேதி குணப்படும்
விதைச் சூரணத்துடன்
சர்க்கரை நெய் உட்க்கொண்டால் உடல் தேறும்
விதையை பாலில்
வேகவைத்து போதுமான அளவு சருக்கரை அல்லது வெல்லம் சேர்த்து இலேகியம் போலகிண்டி கழற்சிக்காய்
அளவு காலை மாலை சாப்பிட வயிற்றுப் பொருமல், நீங்கும் பாலை சுரப்பிகும்,
சுக்கிலத்தை பெருக்கும், வெள்ளை நோயை குணமாக்கும் இடுப்புவலியை நீக்கும்
கடுகிற்குப் பதிலாக
இவ்விதையை நீர்விட்டரைத்து இரத்தக் கெடுதியினால் வந்த சரும நோய்களுக்கு
வெளிப்பிரயோகஞ் செய்யலாம்.
வாதவலிக்கும் உல்
தாபிதங்களுக்கும் விதையைப் பழரசம் விட்டரைத்துச் சீலையில் தடவிப் போடலாம்.
மருத்துவன் தன்
அனுபவத்தில் இவ்விதையை அதன் குணத்திற்குப் பொருந்திய இதர பொருள்களுடன் சேர்த்து
நோயாளிகளுக்கு தகுந்தபடி செய்து கொடுக்கலாம்.
வேர்
மேகப் புண்களுக்கும்
ஆசனக் கடுப்பிர்க்கும், இதன் வேரை உபயோகிக்கலாம்.
எண்ணெய்
இதையும் மேற்கண்ட
நோய்களில் உபயோகிக்கலாம் உல் புண்களிலும் மிகப்பலன் தரும்
********



Comments
Post a Comment