அலரி – ALARI வேறு பெயர் – கத்துரிப்பட்டை, கனவீரம்,கரவீரம்,கவிரம். ஆங்கிலப் பெயர் – THE OLEANDER தாவரவியல் பெயர் – NERIUM O DORUM SOLAND இது செடி வகுப்பில் சேர்ந்தது. வட இந்தியாவிற்குரிய தாக கருதப்பட்டாலும், தெனிந்தியாவிலும், தோட்டங்களிலும் ஏராளமாய்க் காணலாம். இதில் வெண்மை, செம்மை, அழுக்கு மஞ்சள் நிறமுள்ள பூக்களை பூக்கும் வகைகளும் உண்டு, வெண்ணிற பூ உள்ள செடி வெள்அலரி என்றும் மஞ்சள் நிறப் பூ உள்ளது மஞ்சள் அலரி என்றும் வழங்கப்படும். செந்நிறப் புட்பம் உள்ளது தன்னுள் செவ்அலரி, குங்கம அலரி என இருவகையும் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு வகையிலும் ஓரடுக்கு முதல் பல அடுக்கு இதழுள்ள பூக்கள் உண்டு. குணத்திலும், சுவையிலும், செய்கையிலும் சற்றேறக் குறைய ஒன்றாகவே இருக்கும். வருட முற்றும் பூக்கும். மருத்துவ பகுதி – பூ, வேர்பட்டை சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் – வாந்தியுண்டாக்கி – EMETIC ...
Comments
Post a Comment