Posts

Showing posts from April, 2021

ஆ - வரிசை ஆடாதொடை

Image
  ஆடாதோடை – ADATODAI வேறு பெயர் – ஆடாதொடை , வாசை . ஆங்கிலப் பெயர் – MALABARNUT தாவரவியல் பெயர் – ADHATODA VASAICA இச் செடி இந்தியாவிலும் வங்காள தேசம் முற்றும் ஏராளமாயும் , மற்ற இடங்களில் சாதாரண மாயும் பயிராகின்றது . இதன் இலை , மா , நுனாயிலைகளைப் போல் 4 – 9   அங்குல நீளமாயும் இரண்டு முதல் மூன்று அங்குலம் அகலமாயும் இருக்கும் . செடி நான்கு முதல் பத்து அடி உயரம் வரை வளரும் . மருத்துவ பகுதி – இலை , பூ , வேர் , பட்டை . சுவை – கைப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு . செயல் – இசிவகற்றி – ANTISPASMODIC கோழையகற்றி ------- EXPECTORANT நுட்புழுக் கொல்லி ---- GERMICIDE சிறுநீர் பெருக்கி --------- DIURETIC இலையின் குணம் – கபாதிக்கம் , வாத தோடம் , பற்பல சுரம் சந்நிபாதம் – 13 , வயிற்று நோய் , மேலும் தாபசுரம் , உட் சூடு இரத்த பித்தம் , காசம் , சயம் , மேல் இளைப்பு , வாந்தி வீக்கம் . சூலை . குட்டம் . மூலரோகம் . பித்த சிலேத்தும பிணிகள் , அண்டவாயு ஆகிய இவைகளைப் போக்கும் . குரலுக்கு சங்கீதம் பாடக் கூடிய தொனியைத் தரும் . பாடல் – ஆடாதோடையின் குணத்தை அடைவுடனுர