Posts

Showing posts from June, 2021

இ - வரிசை இருவாட்சி

Image
  இருவாட்சி – IRUVATSHI வேறுபெயர் – அனங்கம், நவமல்லிகை, மயிலை, வசந்தி. Flore Multiplicata English – Arabian Jasmin Telungku – malle, malayaalam – mullachehapu, Kanadam – mallige,   இந்தியா பர்மா,இலங்கை இவ்விடங்களில் அபரிமிதமாக பயிரிடப்படுகிறது. மருத்துவ உபயோகப்பகுதி – இலை, பூ, வேர், எண்ணெய். சுவை – கார்ப்பு, வீரியம் ௦௦ வெப்பம், பிரிவு – கார்ப்பு. செயல் பால்சுருக்கி – Lactifuge குணம் – நேத்திரப் பிரகாசம், தேகத்தில் நல்ல மனம் வனப்பு, இவைகளை உண்டாக்கும், தேககுத்தலும், மூர்ச்சை நோயும் நீங்கும். கண்ணொளிவும் மெய்யிற் கமல்மனமும் நீடழகும் நண்ணும் வலிமூர்ச்சை நாசமாம் – பண்ணளியும் கங்குலும்வாழ் வார்குழலே ! காரமொடு வெப்புமிகத் தங்குமிகு வரட்சிமரத் தால் ----- அகத்தியர்குணவாகடம் மருத்துவகுணம் – இப்பூக்களில் இருந்து ஒருவித எண்ணெய் எடுக்கின்றனர், இவ்வெண்ணெய் காது, மூக்கு இவ்விடங்களில் உண்டாகும் சீழ்நாற்றம்களுக்கு உபயோகிக்கலாம். இதன் இலை,பூ, வேர் இவைகளை வெளிப்பிரயோகமாக உபயோகிக்கலாம். பால் சுரப்பை குறைக்கும். கண் நோய்களுக்கு இதன் இலையை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலைய

இ - வரிசை இரத்த போளாம் --

Image
இரத்த போளாம் --- RATTABOLAM (சோற்றுக் கற்றாழை பால்) வேறு பெயர் – கரியபோளம், மூசாம்பரம் Aloe indica Telunku --  mushambaram, Malayalam – chenna – nayakam, Kanadam – lala – sara, sanskirit – rakthabolam இது தென்னிந்தியாவில் கடல்கரை ஓரங்களில் ஏராளமாய் பயிராகின்றது, சிறுகற்றாழையின் குணமே இதற்கு உண்டு அதற்குப் பதிலாக இதையும் இதற்குப் பதிலாக அதையும் உபயோகிக்கலாம். இரத்தபோளம் சோற்றுக்கற்றாழை மடலை குறுக்கில் அறிந்து மஞ்சள் நிறமாக வடியும் பால் இது உறைந்தவுடன் கெட்டிப்பட்டு கறுத்த நிறத்தோடு இருக்கும். சூரிய வெப்பத்தில் சிவக்கும் அதனால் இதற்கு இரத்தபோளம் எனப் பெயர் வழங்கப்படுகிறது. சுவை, செயல், குணம் --- கரியபோளத்துக்கு உரியதே ஆகும். ஆனால் வீக்கங்களை மிகச் சீக்கிரத்தில் கரைக்கும். குணம் இதற்கு விசேசமாய் உண்டு. இதன் சிறப்புக் குணம் – அடிபட்டு இரத்தக் கட்டுக்கு அதன் மேல் அதிகரித்த வலியுடன் வீங்குகின்ற வீக்கமும் எழுந்து நிமிர்ந்து நிற்க வொட்டாத பக்கநோயும் மார்பு நோயும் நீங்கும் விழுந்திறந் தங்கிமிக வீங்கு முறுவிக்க மெழுந்து நிற்கவொட்டா விசுவோ – டழுந்தி யுரைத்த தமரும்வலி யோடு