Posts

Showing posts from May, 2021

இ வரிசை இரட்டைப் பேய்மருட்டி

Image
இரட்டைப் பேய்மருட்டி – Erattai -  pei – marutti வேறு பெயர் – வெதுப்படக்கி , பேய்மருட்டி , பேய்வருட்டி , பெய்வெருட்டி , பைசாசம் , பெருந்தும்பை Anisomeles Malabarica English – Malabar cat – mint Telugu – moga – bfra, Malataalam – pey –meratti, Sanskirit – pey – merutti இது தென்னிந்தியாவிலும் , இலங்கை , திருவிதாங்க்கூரிலும் பயிராகும் மருத்துவ உபயோகப்பகுதி – இலை , சமூலம் சுவை – கைப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு . செயல் – பசித்தூண்டி – Stomachic அகட்டுவாய்வகற்றி – Carminative வியர்வை பெருக்கி – Diaphoretic துவர்ப்பி – Astringent    குணம் – இதனால் கணமாந்தம் , பேதி , வயிற்று நோய் , கரப்பான் , கோரசுரம் . “ மாந்தக ணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி சேர்ந்து வருகரப்பான் தீச்க்சுரமும் – போர்ந்துவிடும் வேய்மிரட்டுந்த் தோளுடைய மெல்லியலே ! ராசியமாய்ப் பேய்மிரட்டி யென்றொருகாற் பேசு                                    ----- அகத்தியர் குணவாகடம் . மருத்துவ குணம் – இதன் இலையைக் கசாயமிட்டு கொடுக்க வாந்தி பேதி சீதசுரம் , கோரசுரம் ,

இ -- வரிசை இம்பூறல்

Image
இம்பூறல் – Impural வேறுபெயர் – இம்புராவேர், இன்புறாவேர், சிறுவர், சாயவேர். Oldenlandia Umbellata (Hedyotis Umbellata) Telungu – chiru veru, Malayaalam – chay ver, Kannatam – Chaya beru, Sanskirit – rajana. சர்வ சாதாரணமாகத் தோட்டங்களிலும், மேட்டு நிலங்களிலும் பயிராகும். துணிகளுக்கு சிவப்புச் சாயம் ஏற்ற இதன் வேர் உபயோகப்படுத்துவதில் இராமேஸ்வரம் முதலிய தென்தேச கடற்கரை ஓரங்களில் பயிரிடப்படுகிறது. இது தரையில் படரும் ஓர் வகைச் செடி.   மருத்துவ உபயோகப் பகுதி – இலை,வேர்,வேர்ப்பட்டை, சமூலம். சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு. செயல் – கோழையகற்றி – Expectorant குருதிப்பெருக்கடக்கி – Styptic பித்த நீர் பெருக்கி – Cholagogue குணம் – கபாதிக்கம், பித்தகோபம், பித்தசுரம், இரத்த வாந்தி, இருமல், ஈளை, சுவாசகாசம், வயிற்றிரைச்சல் விக்கல் முதலிய நோய்கள் குணமாகும். வேர்க்குனம் – இன்புறா வேரை இதமாய் அருந்தினவர்க்குப்   பின்புறா தையமொடு பித்தமே – துன்பம் இருமல் சுவாசம் எரிசுரம்வ யிற்றுப் பொருமலுப்பி சம்பறந்து போம் --- அகத்தியர் குணவாகடம். மருத்துவ குணம் – இல

இ -- வரிசை இத்தி

Image
  இத்தி – Itti வேறு பெயர் –இந்திரி, இறலி, சுவி. English – Ficus. Telungu – Juvvi, Kannadam – Itti , Malayalam – Itti, Sanskirit – Plaksham. இது தென்னிந்தியாவில் ஏராளமாய் பயிராகும் தாவர வகுப்பைச் சேர்ந்தது, மருத்துவ உபயோகம் – பிஞ்சு, காய், பட்டை. சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு. செயல் துவர்ப்பி – Astringent பிஞ்சு – குணம் – அதிசாரம், பெரும்பாடு, உட்சூட்டினால் பிறக்கின்ற பிணியினங்களை போகும். வாயு மலக்கட்டு மலக்கழிச்சல் கால்வழியே சாயு மசிர்க்குள் ளேதங்குவெப்பி – நோயினங்கள் எத்திக்கா தாரமூற் றிருப்பன விராவேநல் இத்திக்காய் பிஞ்சுகளை யெண் --- அகத்தியர் குணவாகடம் இப்பிஞ்சுகளை அரைத்துக் கொடுத்தாலும் இதன்பட்டையைக் கஷாயம் செய்து குடித்து வந்தாலும், மேல்கண்ட பிணிகள் நீங்கும். இதன் காயை நெய் விட்டு வெதுப்பி தின்றாலும் வாத மலபந்தம் போகும்      

இ - வரிசை இஞ்சி

Image
  இஞ்சி INJI வேறு பெயர் – அல்லம் , ஆர்த்ரகம் , ஆத்திரம் , இலாக்கொட்டை , நறுமருப்பு , மதில் Zengiber Officinalis English – green ginger, fresh root of – dry ginger   Telungku – allamu, Malayaalam – inji, Kannadam – hashi – shunti, Sanskirit – ardrakam இந்தியாவில் அநேக இடங்களில் பயிரிடப்படுகிறது . நீர் செழிப்புள்ள இடங்களில் முக்கியமாய் உண்டாகிறது . ஆயினும் செம்பாடுகளிலும் , மணல் பூமிகளிலும் சிறப்பாகப் பயிரிடப்படுகிறது . சென்னை , கொச்சி , திருவிதாங்கூர் , முதலிய இடங்களிலும் பஞ்சாப் , வங்காளம் முதலிய இடங்களிலும் ஏறாலாமாய் பயிரிடப்படுகிறது . மருத்துவ உபயோகப் பகுதி – கிழங்கு . சுவை – கார்ப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு . அகட்டுவாய்வகற்றி – Carminative பசித்தீதூண்டி – Stomachie உமிழ்நீர்பெருக்கி – Sialagogue   செரிப்புண்டாக்கி – Digestive வெப்பம்முண்டாக்கி – Stimulant தடிப்புண்டாக்கி – Rubefacient   குணம் – இஞ்சியை உபயோகித்தால் காசம் , கபம் , வெள்ளோகாளம் , பித்ததோடம் , சந்நிபாதசுரம் , வாதசூலை , வாதகோபம் , இவைபோம் , பசியுண்டாகு