Posts

Showing posts from September, 2014

அ - வரிசை - அலரி

Image
அலரி – ALARI வேறு பெயர் – கத்துரிப்பட்டை, கனவீரம்,கரவீரம்,கவிரம். ஆங்கிலப் பெயர் – THE OLEANDER தாவரவியல் பெயர் – NERIUM O DORUM SOLAND         இது செடி வகுப்பில் சேர்ந்தது. வட இந்தியாவிற்குரிய தாக கருதப்பட்டாலும், தெனிந்தியாவிலும், தோட்டங்களிலும் ஏராளமாய்க் காணலாம். இதில் வெண்மை, செம்மை, அழுக்கு மஞ்சள் நிறமுள்ள பூக்களை பூக்கும் வகைகளும் உண்டு, வெண்ணிற பூ உள்ள செடி வெள்அலரி என்றும் மஞ்சள் நிறப் பூ உள்ளது மஞ்சள் அலரி என்றும் வழங்கப்படும். செந்நிறப் புட்பம் உள்ளது தன்னுள் செவ்அலரி, குங்கம அலரி என இருவகையும் பெற்றிருக்கிறது.         ஒவ்வொரு வகையிலும் ஓரடுக்கு முதல் பல அடுக்கு இதழுள்ள பூக்கள் உண்டு. குணத்திலும், சுவையிலும், செய்கையிலும் சற்றேறக் குறைய ஒன்றாகவே இருக்கும். வருட முற்றும் பூக்கும். மருத்துவ பகுதி – பூ, வேர்பட்டை சுவை – கைப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் – வாந்தியுண்டாக்கி – EMETIC          நீர்மலம் போக்கி – PURGATIVE         புழுக் கொல்லி ----- ANTHELMITIC

அ - வரிசை - அரசு

Image
அரசு – ARASU வேறு பெயர் – அச்சுவத்தம், அஸ்வத்தம், திருமரம், சுவாலை, பேதி பனை,கனவாம், சராசனம், பிப்பிலம் . ஆங்கிலப் பெயர் – THE PEEPUL TREE, SACRED FIG தாவரவியல் பெயர் – FICUS RELIGIOSA LINN இது இந்தியாவில் எங்கும் சாதாரணமாய்ப் பயிராகிற பெருமரங்களுள் ஒன்று. ஆணி முதல் ஆவணித் திங்கள் வரையில் பூக்கும். பிராமணர்களால் இம்மரம் தெய்வத் தன்மை உடையதென நம்பப்படுகிறது. இதனால் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகாமையிலும் வைத்து பயிர் செய்யப்படுகிறது. மருத்துவ பகுதி – இலை, வித்து, பட்டை, வேர் . சுவை – துவர்ப்பு, கைப்பு உள்ளது , வீரியம் – சீதம் , பிரிவு – இனிப்பு செயல் – வித்து – மலமிளக்கி – LAXATIVE இலை, வேர், பட்டை –துவர்ப்பி –   ASTRINGENT   குணம் – இளைக் கொழுந்து, தாதுவை விருத்தி செய்யும், சுரத்தையும் முத்தோட கோபத்தையும் போக்கும். வித்து – சுக்கில நோய், குறள் வரட்சி, தாகம், இவற்றை நீக்கும் மரப்பட்டை, வேர்ப்பட்டை – புண்களை ஆற்றும் பாடல் – அரசம்வேர் மேல்விரணம் ஆற்றும் வித்து வெருவ்

அ - வரிசை - அம்மையார் கூந்தல்

Image
அம்மையார் கூந்தல் –   AMMAIYAR KUNTHAAL   வேறுபெயர் – அவ்வையார் கூந்தல், குதிரை வாலி, முதியோர் கூந்தல், கிரியார் கூந்தல், சரண். ஆங்கிலப் பெயர் – CONVOLULUS இது தென் இந்தியாவில் சமவெளிகளில் தன்னிச்சையாக பயிராகிறது. மருத்துவ பகுதி – சமூலம் சுவை – கைப்பு, வீரியம் – சீதம் , பிரிவு – கார்ப்பு செயல் – துவர்ப்பி – ------  ASTRINGENT          உடற் தேற்றி – ALTERATIVE          பசித்தூண்டி ---- STOMCHIC  குணம் – இதனால் மூலக் கடுப்பு, அதிசாரம், சுரவேகத்தாலுன்டான நாவரட்சி, இடுப்புவாதம், பிரமேகம், இருமல், கட்டி படுவன், நேத்திர மங்கள், கோழை, அக்கினி மந்தம் வாதகப தொந்தம், தினவு ஆகிய இவைகள் நீங்கும். பாடல் – கடுப்பு கழிச்சல் கனன்ற சுரதாக மிடுப்பு வலி வாத மிவற்றோ – டடுப்ப விதிரை வா வென்றழைக்கு மேகமும் போகும் குதிரை வாலிக்குக் குலைந்து                                                                            --- அகத்தியர் குணவாகடம் காசம் பருப்படுவன் கண்மயக்க மீளை யொடு வ