Posts

Showing posts from July, 2021

இ - வரிசை இலுப்பை

Image
இலுப்பை – ILUPPAI வேறு பெயர் – இருப்பை, குலகம், மதுகம் ஆங்கிலப் பெயர் – THE MAHWASH (OR) MOWA TREE (OR)  THE NARROW – LEAVED MOHUA தாவரவியல் பெயர் – BASSIA LONGIFOLIA   இது இந்தியாவில், இலங்கையிலும் பயிராகும் மரம் பயன்படும் பாகங்கள் – இலை, பூ, காய், பழம் வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை   சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம் , பிரிவு – கார்ப்பு. செயல் – துவர்ப்பி ------- ASTRINGENT          வெப்பமுண்டாக்கி – STIMULANT          உரமாக்கி ------------- TONIC இலை – பாற்பெருக்கி -------- LACTAGOGUE  குணம் – இலையை முலையில் வைத்துக் கட்ட பால் சுரக்கும். சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு செயல் – உள்ளழாற்றி -------------- DEMULCENT          குளிர்ச்சியுண்டாக்கி --- REFRIGERANT          வெப்பமுண்டாக்கி ------ STIMULANT          உரமாக்கி ---------------------   TONIC   பூவினால் பித்தசுரம், தாக ரோகம் நீங்கும், பித்தமும், பிரமையும் உண்டாகும். பாடல் – குன்றா விளுப்பையின் பூ கூர்மதுரம் வாசனையாஞ் தின்றார் பயித

இ - வரிசை இலவு {முள்ளிலவு}

Image
இலவு – முள்ளிலவு – ILAVU – MUL ILAVU வேறு பெயர் – முள்ளிலவு, சால்மலி, பூரணி, பொங்கல் மோசம் ஆங்கிலப் பெயர் ---- THE REDSILK – COTTON TREE தாவரவியல் பெயர் – BOMBAX MALABARICUM  ( OR) B. HEPTAPHYLLS   இது இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் வளரும் மரவகுப்பைச் சேர்ந்தது. இதன் பூ குங்குமம் போல் சிவப்பாய் இருக்கும். மருத்துவ உபயோகம் – இலவ மரத்தின் குணமும் இதுவும் ஒரே குணத்தைக் கொண்டு இருக்கும். சுவை – இனிப்பு, துவர்ப்பு , வீரியம் – சீதம், பிரிவு – கார்ப்பு செயல் – இலை – குளிர்ச்சியுண்டாக்கி ----- REFRIGERANT                  உள் அழல் ஆற்றி -------- DEMULCENT          பூ --      மலகாரி ------------------------- LAXATIVE                  சிறுநீர் பெருக்கி ------------ DIURETIC          விதை – காமம் பெருக்கி ------------ APHRODISIAC                  உள்ளழாற்றி ------------------ DEMULCENT                  குருதி பெருக்கடக்கி ---- STYPTIC          பட்டை – துவர்ப்பி ----------------------- ASTRINGENT MILD                   உள்ளழாற்றி --------------- DEMUL

இ - வரிசை இலவங்கம்

Image
இலவங்கம் --- LAVANGAM :--- வேறு பெயர் – அஞ்சுகம், உற்கடம், கருவாய், கிராம்பு சொசம்,திரளி, வராங்கம் ஆங்கிலப் பெயர் --------- CLOVES தாவரவியல் பெயர் ----- CARYOPHYLLUM         இது இந்தியாவிலும் இலங்கையிலும் பயிராகிறது. எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். இது நல்ல மனம், காரம், விறுவிறுப்பு உள்ளதாகவும் கிள்ளினால் தைலப் பசை உள்ளதாயும் இருக்கும். சுவை – காரமும் விறு விருப்பும் உள்ளது . வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு செயல் – இசிவகற்றி – ----- --------- ANTISPAMODIC          அகட்டுவாய்வகற்றி ---- CARMINATIVE           பசித்தூண்டி ---------------- STOMACHIC   குணம் --  கிராம்பு பித்த மயக்கம், பிரதி வாந்தி, இரத்தக் கடுப்பு, கிராணி, ஆசனப்பிடுங்கள், சுக்கில நட்டம், செவிநோய், சிவந்த மச்சம், கருத்த மச்சம், விவுர்தம், சம்விவுர்தம், என்ற வாதங்கள், கண்ணில் பூ, படை இவைகளை நீக்கும். கரிமசாலையில் சேர்க்கப்படுகிறது. பாடல் --- பித்த மயக்கமரும் பேத்தியோடு வாந்தியும் போம் சுத்தவிரத் தக்கடுப்பும் தோன்றுமோ – மெத்த இலவங்கங் கொண்டவருக் கேற்ற சுகமாகும் மளமங்கே கட்டு மென வாழ்த

இ - வரிசை இலவங்க பத்திரி

Image
இலவங்கப் பத்திரி – LAVANGKA PATHTHIRI ஆங்கிலப் பெயர் – ACHINNAMUM LEAVES தாவரவியல் பெயர் – CHINNAMUM TAMALE, CASSIA LINGNEA        இது இந்தியாவில் இமயமலை, கீழ்வங்காளம் முதலிய இடங்களிலும், பர்மா முதலிய நாடுகளிலும் விளைகிற ஒருவகை. இலவங்கப் பட்டைச் செடியின் குணமும் வாசனையும் இதற்கு உண்டு. இதன் பட்டை விலையுயர்ந்த இலங்கைக் கருவாபட்டைக்குப் பதில் உபயோகப்படுகிறது. சுவை – கார்ப்பு, வீரியம் --- வெப்பம் , பிரிவு – கார்ப்பு செயல் --- வெப்பமுண்டாக்கி ------ stimulant           அகட்டுவாய்வகற்றி --- carminative           பசித்தூண்டி - ------ -------- stomachic           வியர்வை பெருக்கி --- diaphoretic குணம் --- மேகசுரம், சீதசுரம், வேட்டை, சுவாசம், காசம். தாகம், பித்தம், வாந்தி, வாய்ப்புண், மேகக் கட்டி, தாது நட்டம், கைப்பு, அருசி, இவைகளைப் போக்கும். பாடல் --- மேகசுரம் சீதசுரம் வெட்டை சுவாசங் காசம் தாகபித்தம் வாந்திசர் வாசியநோய் – மேகத்தின் கட்டியோடு தாதுநட்டங் கைப்பருசி போக்கிவிடும் இட்ட இலவங்கத் திலை                                                ---  அகத்தி

இ - வரிசை இலவங்கப் பட்டை

Image
  இலவங்கப் பட்டை – LAVANGA PATTAI வேறு பெயர் – கருவாய் பட்டை ஆங்கிலபெயர் – CINNAMON – BARK தாவரவியல் பெயர் – CHINNAMONUM ZEYLANICUM                   கருவாப்பட்டைச் செடி இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உரிய பயிர், ஆயினும் இலங்கையில் தான் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இது மற்ற நாடுகளை விட உயர்வானது. இது சமையலில் வாசனைக்காக பயன்படுகிறது. இது வாய் நாற்றத்தைப் போக்கும். சுவை – காரமும், இனிப்பும் உள்ளது , வீரியம் – சீதம் பிரிவு – கார்ப்பு செயல் – வெப்பமுண்டாக்கி ------ STIMULANT          அகட்டுவாய்வகற்றி ---- CARMINATIVE          காமம் பெருக்கி ---------- APHRADISIAC   குணம் --- தாது நஷ்டம், ஆசியநோய், சர்ப்ப விஷம், பேதி அதிசாரம், பூதகிரகம், இரைப்பு, சகலவிஷம், சிலந்தி விஷம், இருமல், இரத்தக் கடுப்பு, வயிற்றுக் கடுப்பு, உல் மூலம் ஆசனப்புண், இவைகளையும் நீக்கும். தேகத்துக்கு குளிர்ச்சி உண்டு பண்ணும். பாடல் – தாதுநட்டம் பேதி சருவ விஷம் ஆசியநோய் பூதகிர கஞ்சிலந்திப் பூச்சி விடம் – சாதிவிடம் ஆட்டு மிறைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற ஒட்டுங்இல வங்கத்துரி சன்னலவங்

இ - வரிசை இரேவல் சின்னி

Image
  இரேவல் சின்னி --- REVAL CINNI வேறு பெயர் – பேதிக் கிழங்கு, மஞ்சட் சீனிக் கிழங்கு, வரியாத்து கிழங்கு,நாட்டு ரேவல் சின்னி. ( RHEUME MODI, R. ACUMINATUM, R. AUSTRALE, R. MOORCRO   OF TICANUM, R. SPECI FORME ) ஆங்கிலப் பெயர் – HIMALAYAN – RHUBARB தாவரவியல் பெயர் – R. WEBBIANUM OF THE GERMS OF POLYGONACEAE இது திபெத்து தார்தாரி, பிரதேசங்களிலும், இந்தியாவில் இமயமலைப் பிரதேசங்களில் பயிராகிறது.இமயமலையில் விளைவதற்கு, நாட்டு ரேவல் சின்னி, என்று பெயர். இது சீன தேசத்துச் சரக்குக்குத் தாழ்ந்தது என்று கருதப்படுகிறது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு வட்டமாகவாவது, தட்டையாகவாவது இருக்கும். இதில் ஒரு துவாரம் இருப்பது உண்டு வெளிப்புறம் மஞ்சள் சாயலாகவும்   உட்புறம் வரிவரியாகவும் மென்றால் மணலைப் போல் நாரணர வென்றும் இருக்கும். இதில் ஒரு வித வாசனையுமுண்டு சொத்தை விழுந்திராது. சுவை – துவர்ப்பு,கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு செயல் – துவர்ப்பி – ASTRIGENTA உரமாக்கி --- TONIC பெருமலம் போக்கி --- CATHARTIC பசித்தூண்டி ---------------- STOMACHIC குணம் – மலபந்தம், அக்கின