Posts

Showing posts from November, 2014

அ - வரிசை - அறுவாள்மூக்கு

Image
அரிவாள் மூக்குப் பச்சிலை – ARUVAL MOOKKU PACHSILAI வேறு பெயர் – அரிவாள் மனைப் பூண்டு தாவரவியல் பெயர் – SIDA RHOMBOIDEA – LINN இது சாதரணமாக தன்னிச்சையாக பயிராகும் பூம்டினம். தென் இந்தியா எங்கும் கிடைக்கும். மருத்துவ பகுதி – இலை சுவை – துவர்ப்பு, சிருகைப்பு , வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு .  செயல் -- குருதி பெருக்கடக்கி --- STYPTIC   குணம் – ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தை ஆற்றும். கொடிய விடத்தையும் இரத்தக் கெடுதியில் பிறந்த தலை நோயையும் நீக்கும். பாடல் – வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்திவிடும் துட்டக் கடு வோட்டுந் தோன்றி மிகக் – கெட்ட பிரிவார்ற் றலையைப் பிளக்கும் வலி நீக்கும் அரிவாள் மூக்குப் பச்சிலை                                                                           --- அகத்தியர் குணவாகடம் வெட்டுக் காயமுள்ள இடத்தில் இப்பச்சிலையை அரைத்துக் பூச இரத்தம் நிற்கும், காயம் வெகு சீக்கிரத்தில் ஆறிப்போம். இப் பச்சிளையுடன் மிளகு, பூண்டு சேர்த்துக் கர்கமாக்கி கொடுக்க விடம் நீங்க

அ - வரிசை - அறு நெல்லி

Image
அருநெல்லி – ARUNELLI ஆங்கிலப் பெயர் – COUNTRY GOOSE BERRY தாவரவியல் பெயர் –   AVVERRHOEA ACIDA இது சிறு மரக் கூட்டத்தை சேர்ந்தது. மலேயா தேசத்துப் பயிராக கூறப்படுகிராது, இந்தியாவில் தோட்டங்களிலும் வைத்துப் பயிரிடப்படுகிறது. மருத்துவப் பகுதி – இலை, காய். விதை, வேர். சுவை – புளிப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் – இலை –வியர்வை பெருக்கி – DIAPHORETIC          விதை – மலமிளக்கி – LAXATIVE          காய் – பித்தசமணி – ANTIBILIOUS   மருத்துவ குணம் – இலை – இதை அரைத்துப் புண்ணைக் காயளவு எடுத்து கால் படி மோரில் கலந்து  மூன்று நாள் காலை, மாலையில் மாத்திரம் சாப்பிட காமாலை நீங்கும். இதைக் கொள்ளும் போது உப்பை நீக்கி சோற்றுடன் வெள்ளாட்டுப் பால் விட்டு கலந்து சாப்பிடவும். மருத்துவ குணம் – காய் – இக்காயை, சீதபித்தம், காசம், தாகம் உட்சூடு இவைகட்கு வழங்கலாம் . பாடல் -- அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் பித்தம் போக்கும்  மருத்துவர் பால் துரிசை மாற்றும் – விரியுலகில் தாகத் துயர் நீக்குஞ் சாரிருமலைத் தொலைக்கும் ஆகக் கொத்திப் பகற்று  மாங்கு  

அ - வரிசை அறுவதா

Image
அறுவதா – ARUVATHA வேறுபெயர் – அர்வதா – சதாப்பு தாவரவியல் பெயர் --- RUTA ANGUSTI FOLIA, RARAVEOLENS இது 2-3 அடி உயர முல்லா செடி. அதிக வெப்பமும் அதிக குளிர்ச்சியும் இல்லா இடங்களில் பயிராகும். இந்தியாவில் பயிராகிற இச்செடியின் குணம் தென் ஐரோப்பாவிலும்,தென் அமெரிக்காவிலும் பயிறாகிறதற்கு தாழ்ந்ததல்ல. இதன் இலை பச்சையாக இருக்கும். இதில் எண்ணெய் பசை உண்டு. ஒரு வித மனமுண்டு சுவைத்தால் வேகுட்டல்லுடன் கைப்பும் விறுவிறுப்பும் இருக்கும். உலர்ந்தால் இதன்குனம் குறையும். மருத்துவ பகுதி – இலை சுவை – கைப்புடன் கார்ப்பு , வீரியம் – வெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் ---- இசிவகற்றி – ------------------- ANTISPASMODIC அகட்டுவாய் அகற்றி ---- CARMINETIVE வெப்பம் உண்டாக்கி ------ STIMULANT புழுக் கொல்லி ---------------- ANTHELMINTIC தடிப்புண்டாகி ------------------- RUBEFACIENT உரமாக்கி --------------------------- TONIC   ருதுவுண்டாக்கி   ----------- ----  EMMENOGOGUE குணம் –         சூதக சந்நி, சூதக வாயு, பிரசவ மாதர்களின் வேதனை, வயிற்றுப் பொருமல் (

அ - வரிசை - அறுகீரை

Image
அறுகீரை – ARUKEERAI வேறு பெயர் – அரைக்கீரை,  அறைக்கீரை தாவரவியல் பெயர் – AMARANTUS TRISTIS இது தெனிந்தியாவில் சாதாரணமாகப் பயிராகக் கூடிய ஓர் குத்துச் செடி. மருத்துவ பகுதி – கீரை,விதை . சுவை – இனிப்பு, வீரியம் – வெப்பம் , பிரிவு – இனிப்பு செயல் --- வெப்பம் உண்டாக்கி --- STIMULANT           காமம் பெருக்கி ------------   APHRODISIA   குணம் --- இக் கீரையை கறியாக்கி உண்ண சுரம் நடுக்கல் சந்நிபாதம், கபரோகம், வாத நோய் ஆகிய இவைகள் போம். தாது விருத்தியாம். பாடல் – காய்ச்சல் குளிர்சன்னி கபநோய் பலபிணிக்கும் வாய்ச்ச கறியால் வழங்க்குங்கான் – வீச்சாய்க் கருதுமோ வாய்வினங் காமமிக வுண்டாம் அறுகீரை யைத்தின்றறி --- அகத்தியர் குணவாகடம் இது தென்னாட்டில் பல பிணிகளிலும் பத்திய பதார்த்தமாக வழங்கப்படும். அரைக்கீரை விதை – மருத்துவ குணம் –         இதை நீர் போக்கிய தேங்காய்க்குள் செலுத்தி தமரிட்டு சதுப்பு நிலத்தில் புதைத்து 40,50, நாள் சென்றபின் எடுத்து ஓட்டை நீக்கி மற்றவைகளை நல்லெண்ணையுடன் கூட்டி எரித்து தைலம் வடித்துத் தலை முழுகி வர சிரோரோகம் போம