Posts

Showing posts from October, 2014

அ - வரிசை - அறுகம்புல்

Image
அறுகம்புல் – ARUGAM PUL வேறு பெயர் – மூதண்டம், அறுகு, பதம், தூர்வை, மேகரி . தாவரவியல் பெயர் – GYNODON DACTYLON இது எல்லா இடங்களிலும் வளரக் கூடியது சிறு கோடி வகுப்பு மருத்துவ பகுதி – இலை, வேர் சுவை – பணிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு. செயல் – வரட்சியகற்றி – EMOLLIENT          துவர்ப்பி – ASTRINGENT சிறுநீர்ப் பெருக்கி – DIURETIC குருதிப் போக்கடக்கி – STYPTIC குணம் --- திரிதோடம், ஈளை (கோழை) கண்நோய், கண்புகைச்சல், தலை நோய்,  இரத்தபித்தம், மருந்துகளின் வெப்பம் ஆகிய இவைகளைப் போக்கும். பாடல் – அறுகம்புல் வாதபித்த ஐயமோ பீளை சிறுக அறுக்கும் இன்னுஞ் செப்ப – அறிவுதரும் கண்ணோயோடு தலைநோய் கண்புகைச்சல் ரத்தபித்தம் உண்நோய் யொழிக்கும் மருத்துவ குணம் – அருகம்புல்லின் சீத ஊரல் கியாழத்துடன் பாலுஞ்சேர்த்து உட் கொள்ள மூலரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.         அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றைக் கண்ணுக்குப் பிழிய கண்ணோய், கண்புகைச்சல், மூக்கிலிட இரத்த பீனிசமும் காயப் பட்ட இடத்தில்

அ - வரிசை - அழிஞ்சில்

Image
அழிஞ்சில் – AZHINJIL வேறு பெயர் – அங்கோலம், செம்மரம், செய் ஆங்கிலப் பெயர் – SAGE LEAVED ALANGIUM தாவரவியல் பெயர் – ALANGIUM DECAPETALUM இம்மரம் தென் இந்தியா பர்மா இவ்விடங்களில் வெப்ப பாங்கான இடங்காளில் பயிராகின்றது. மருத்துவ பகுதி – விதை, பட்டை சுவை – கைப்பு, வீரியம் – மவெப்பம் , பிரிவு – கார்ப்பு. செயல் --- உடல்தேற்றி – ALTERATIVE           புழுக்கொல்லி --- ANTHELMINTIC          சிறுநீர் பெருக்கி --- DIURETIC          வாந்தியுண்டாகி – EMETIC          வெப்பகற்றி ------- FEBERIFUGE         மலமிளக்கி ---------- LAXATIVE          குமட்டல்லெ ழுப்பி – NAUSEANT  விதையின் செயல் – உடலுரமாக்கி – NUTRITIVE   குணம் – வாத கோபம் கபதொடம், சீவடியும் பெருநோய் ஆகியாவை இவற்றை நீக்கும் ஆனால் பித்தத்தை உயர்த்தும் பாடல் – அழிஞ்சிலது மாருதத்தை யையத்தைத் தாழ்த்தும் ஒளிஞ்சபித் தத்தை யுயர்த்தும் – விழுஞ்சீழாங் குட்டமெனு நோயகற்றும் கூறு மருந் தெய்திடல் திட்                                        -----

அ - வரிசை - அழவனம்

Image
அழவணம் – AZHAVANAM வேறு பெயர் – ஐவனம், மருதோன்றி, சரணம் ஆங்கிலப் பெயர் – HENNA PLANT தாவரவியல் பெயர் – LAWSONIA ALBO                                                    LAWSONIA  SPINOSA                                                   LAWSONIA INERMIS இது இந்தியாவில் முழுவதும் பயிராகும் சிறு மரவகுப்பைச் சேர்ந்தது. மருத்துவ பகுதி – இலை, பூ, வித்து, பட்டை சுவை – துவர்ப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு. இலை – செயல் – துவர்ப்பி – ASTRINGENT                  புண் அழுக்கற்றி – DETERGENT                   நாற்றம் அகற்றி – DEODORANT குணம் – கீல்வாதம், வாதக் குடைச்சல், சிரரோகம், கைகால்வழி, எரிச்சல் ஆகிய இவைகட்க்கு அழவன இலையை புளித்த காடியேனும், எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்துப் பூசி வரலாம். இலையைப் பாதத்தில் தேய்ப்பதால் கால் எரிச்சல் போம். நசுங்குவதால் நேரிடும் விரணம் சுளுக்கு இலைகளுக்கு இலையை சிதைத்துக் கட்ட குனமுன்டாகும். இலையை அரைத்து வைத்துக் கட்ட கண் வேக்காடு குணப்படும் மூன்று நாளைக்குள்