அ - வரிசை - அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம் – ANASI – PAZHAM












வேறுபெயர் – பூந்தாலம் பழம்
ஆங்கிலப் பெயர்THE PINE APPLE
தாவரவியல் பெயர்ANANAS SATIVAS SCHULT
இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
மருத்துவ பகுதிஇலை, காய் பழம்.
சுவை – பழம்புளிப்பு, இனிப்பு, விறுவிறுப்பு, வீரியம்சீதம், பிரிவு இனிப்பு.
செயல் –
        இலை – நுட்புழுக் கொல்லிGERMICIDE
                நீர்மலம் போக்கி ----- PURGATIVE
        காய் -  வியர்வை பெருக்கி --- DIAPHORETIC
                மலமிளக்கி ----------------- LAXATIVE
                சிறுநீர் பெருக்கி -------- DIURETIC
        பழம் – நுட்புழுக் கொல்லி ----- GERMICIDE
                சிறுநீர் பெருக்கி -------- DIURETIC
                குருதி பெருக்கடக்கி --- STYPTIC
                ருதுவுண்டாக்கி ----------- EMMENGOGUE
மேக வேட்டை வாந்தி பித்த நிய, தாகம், தலைவலி, ஆகிய இவை போம், அழகுண்டாகும்.
பாடல் –

மேக வெட்டை வாந்தி பித்த மீறாவாம் மேனியிடுந்
தாகமுமட்டாகும் தலைவலிபோம் – பாகமுறு
பூந்தாழை யின்பழத்தைப் பூரிப்புடன் புசிக்க
லாந்தாழ்வும் இல்லையறி
---- அகத்தியர் குணவாகடம் 



இலைச் சாற்றை ஒரு உச்சிக் கரண்டி அளவு எடுத்து சருக்கரை சேர்த்து கூட்டிக் கொடுக்க விக்கல் போம். இரண்டு கரண்டி அளவு உட் கொள்ள பேதியாகும்

இதன் காய் அல்லது பலத்தை அதிக அளவில் தின்றால், தொண்டைகட்டும் கரு அழியும் ஆகையால் இதைக் கருப்ப மாதர்கள் உபயோகிக்க லாது. பழரசத்தை வெதுப்பிக் கொடுக்க வாந்தி வயிற்று க் கடுப்பு காமாலை முதலிய பித்த நோய் நீங்கும் பழரசத்த மணப்பாகு செய்து உண்டுவர வெட்டை வாந்தி,தாகம், பித்த நோய் தணியும் பித்தத்தால் உண்டாகும் சிரோரோகம் சாந்தமாகும்.





அன்னாசிப்பூ – ILLICIUM – VEERUM
இதுவே அன்னாசிப்பூ சைனா, கொச்சின் – சைனா முதலிய இடங்களில் இருந்து இந்தியாவி ற்கு வருகிறது
சுவைஇனிப்பு, விறுவிறுப்பு  ,வீரியம் – வெப்பம், பிரிவுகார்ப்பு
செயல் – பசித்தீதூண்டிstomachic
         வெப்பம் உண்டாக்கி ---- stimulant
         உரமாக்கி ---------------------- tonic
குணம் – அசீரணம், மந்தம், பலவீனம், முதலிய நோய்களைப் போக்கு.
இப்பூவைச் சூரணம் செய்து 3gm  முதல் 5gm வராகனெடை வீதம் நாள் ஒன்றுக்கு 2, 3, முறையும் கொள்ள மேற்கண்ட நோய்களும், புளி ஏப்பமும் நீங்கும்



















Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி