அ - வரிசை - அலரி

அலரி – ALARI























வேறு பெயர்கத்துரிப்பட்டை, கனவீரம்,கரவீரம்,கவிரம்.
ஆங்கிலப் பெயர்THE OLEANDER
தாவரவியல் பெயர்NERIUM O DORUM SOLAND
        இது செடி வகுப்பில் சேர்ந்தது. வட இந்தியாவிற்குரிய தாக கருதப்பட்டாலும், தெனிந்தியாவிலும், தோட்டங்களிலும் ஏராளமாய்க் காணலாம். இதில் வெண்மை, செம்மை, அழுக்கு மஞ்சள் நிறமுள்ள பூக்களை பூக்கும் வகைகளும் உண்டு, வெண்ணிற பூ உள்ள செடி வெள்அலரி என்றும் மஞ்சள் நிறப் பூ உள்ளது மஞ்சள் அலரி என்றும் வழங்கப்படும். செந்நிறப் புட்பம் உள்ளது தன்னுள் செவ்அலரி, குங்கம அலரி என இருவகையும் பெற்றிருக்கிறது.
        ஒவ்வொரு வகையிலும் ஓரடுக்கு முதல் பல அடுக்கு இதழுள்ள பூக்கள் உண்டு. குணத்திலும், சுவையிலும், செய்கையிலும் சற்றேறக் குறைய ஒன்றாகவே இருக்கும். வருட முற்றும் பூக்கும்.
மருத்துவ பகுதிபூ, வேர்பட்டை
சுவை கைப்பு, வீரியம்வெப்பம், பிரிவுகார்ப்பு
செயல் – வாந்தியுண்டாக்கிEMETIC
         நீர்மலம் போக்கிPURGATIVE
        புழுக் கொல்லி ----- ANTHELMITIC

























குணம் – பூ – சுரம், அரோசகம், குட்டம், தாகம், படை, கிரந்தி, இரத்தக் கட்டி, பித்த நோய், தலை எரிவு இவைகளைப் போக்கும்.
பாடல் –
வெப்பருசி குட்டம் விதாகம் சொறிசிரங்கு
செப்பிரத்தம் புன்பித்தஞ் சென்னிஎரி – விப்படியில்
தங்குமோ கும்பத் தனத்த்தனங்கே ! வாசஞ்சேர்
கொங்கலறிப் பூப் பெயரைக் கூறு
                                                                          --- அகத்தியர் குணவாகடம்
வேர்ப்பட்டை – மருத்துவ குணம்
        இதற்கு விடமிக்கும் குணம் இருப்பதால், உயிரை போக்கும் இதை அரைத்து நல்லெண்ணையில் கலக்கி சாப்பிட தோசங்கள் விகற்பப் பட்டு உயிரை போக்கும்.

வேர்ப்பட்டையை, நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி காதில் 2 -3 துளி விட காதில் வடியும் சீ, காதுவலி காத்து விரணம் இவைகள் நீங்கும், காதில் தங்கிய பூச்சிகள் சாகும். 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி