இ - வரிசை இரத்த போளாம் --



இரத்த போளாம் --- RATTABOLAM

(சோற்றுக் கற்றாழை பால்)

வேறு பெயர் – கரியபோளம், மூசாம்பரம்

Aloe indica

Telunku --  mushambaram, Malayalam – chenna – nayakam, Kanadam – lala – sara, sanskirit – rakthabolam

இது தென்னிந்தியாவில் கடல்கரை ஓரங்களில் ஏராளமாய் பயிராகின்றது, சிறுகற்றாழையின் குணமே இதற்கு உண்டு அதற்குப் பதிலாக இதையும் இதற்குப் பதிலாக அதையும் உபயோகிக்கலாம்.

இரத்தபோளம்

சோற்றுக்கற்றாழை மடலை குறுக்கில் அறிந்து மஞ்சள் நிறமாக வடியும் பால் இது உறைந்தவுடன் கெட்டிப்பட்டு கறுத்த நிறத்தோடு இருக்கும். சூரிய வெப்பத்தில் சிவக்கும் அதனால் இதற்கு இரத்தபோளம் எனப் பெயர் வழங்கப்படுகிறது.

சுவை, செயல், குணம் --- கரியபோளத்துக்கு உரியதே ஆகும். ஆனால் வீக்கங்களை மிகச் சீக்கிரத்தில் கரைக்கும். குணம் இதற்கு விசேசமாய் உண்டு.

இதன் சிறப்புக் குணம் – அடிபட்டு இரத்தக் கட்டுக்கு அதன் மேல் அதிகரித்த வலியுடன் வீங்குகின்ற வீக்கமும் எழுந்து நிமிர்ந்து நிற்க வொட்டாத பக்கநோயும் மார்பு நோயும் நீங்கும்

விழுந்திறந் தங்கிமிக வீங்கு முறுவிக்க

மெழுந்து நிற்கவொட்டா விசுவோ – டழுந்தி

யுரைத்த தமரும்வலி யோடு மெதிரற்நிற்கா

திரத்த போளத்தை எடு

----- அகத்தியர் குணவாகடம்.

மருத்துவகுணம் – இதை நீரிற் கரைத்துக் கொதிக்க வைத்து மேற்கண்ட வீக்கங்களுக்கும் உபத்திரவங்களுக்கும் பற்றிட மிகத்துரிதத்தில் குனமுன்டாகும்.

******** 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி