இ - வரிசை இருவாட்சி

 

இருவாட்சி – IRUVATSHI

வேறுபெயர் – அனங்கம், நவமல்லிகை, மயிலை, வசந்தி.

Flore Multiplicata

English –


Arabian Jasmin

Telungku – malle, malayaalam – mullachehapu, Kanadam – mallige,  இந்தியா பர்மா,இலங்கை இவ்விடங்களில் அபரிமிதமாக பயிரிடப்படுகிறது.

மருத்துவ உபயோகப்பகுதி – இலை, பூ, வேர், எண்ணெய்.

சுவை – கார்ப்பு, வீரியம் ௦௦ வெப்பம், பிரிவு – கார்ப்பு.

செயல்

பால்சுருக்கி – Lactifuge

குணம் – நேத்திரப் பிரகாசம், தேகத்தில் நல்ல மனம் வனப்பு, இவைகளை உண்டாக்கும், தேககுத்தலும், மூர்ச்சை நோயும் நீங்கும்.

கண்ணொளிவும் மெய்யிற் கமல்மனமும் நீடழகும்

நண்ணும் வலிமூர்ச்சை நாசமாம் – பண்ணளியும்

கங்குலும்வாழ் வார்குழலே ! காரமொடு வெப்புமிகத்

தங்குமிகு வரட்சிமரத் தால்

----- அகத்தியர்குணவாகடம்

மருத்துவகுணம் – இப்பூக்களில் இருந்து ஒருவித எண்ணெய் எடுக்கின்றனர், இவ்வெண்ணெய் காது, மூக்கு இவ்விடங்களில் உண்டாகும் சீழ்நாற்றம்களுக்கு உபயோகிக்கலாம்.

இதன் இலை,பூ, வேர் இவைகளை வெளிப்பிரயோகமாக உபயோகிக்கலாம். பால் சுரப்பை குறைக்கும்.

கண் நோய்களுக்கு இதன் இலையை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்க்கலாம்,

இரத்த வாந்தியில் இதன் பூவைக் கசாயம் செய்து உள்ளுக்குக் கொடுத்தும் கண்ணில் இரத்தம் வரின் இப்பூவின் சாறை கண்ணில் விட்டு வருவதும் வழக்கம்

சீனாவில் தேயிலைப்பானம் நறுமணம் பெற இதன் பூவை சேர்த்து உபயோகிக்கின்றனர். எனத் கூறப்படுகிறது.

*********

 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி