அ - வரிசை - அம்மையார் கூந்தல்

அம்மையார் கூந்தல் –  AMMAIYAR KUNTHAAL  
























வேறுபெயர் – அவ்வையார் கூந்தல், குதிரை வாலி, முதியோர் கூந்தல், கிரியார் கூந்தல், சரண்.
ஆங்கிலப் பெயர்CONVOLULUS
இது தென் இந்தியாவில் சமவெளிகளில் தன்னிச்சையாக பயிராகிறது.
மருத்துவ பகுதிசமூலம்
சுவை – கைப்பு, வீரியம் – சீதம், பிரிவு கார்ப்பு
செயல் – துவர்ப்பி------  ASTRINGENT
         உடற் தேற்றி ALTERATIVE
         பசித்தூண்டி ---- STOMCHIC 
குணம் – இதனால் மூலக் கடுப்பு, அதிசாரம், சுரவேகத்தாலுன்டான நாவரட்சி, இடுப்புவாதம், பிரமேகம், இருமல், கட்டி படுவன், நேத்திர மங்கள், கோழை, அக்கினி மந்தம் வாதகப தொந்தம், தினவு ஆகிய இவைகள் நீங்கும்.




















பாடல் –
கடுப்பு கழிச்சல் கனன்ற சுரதாக
மிடுப்பு வலி வாத மிவற்றோ – டடுப்ப
விதிரை வா வென்றழைக்கு மேகமும் போகும்
குதிரை வாலிக்குக் குலைந்து
                                                                           --- அகத்தியர் குணவாகடம்
காசம் பருப்படுவன் கண்மயக்க மீளை யொடு
வாசங் கமழ்குழலாய் ! மந்தமும் போம் – பேசத்
தரியாது வாதகபந்தானே சொறிபோம்
மிரியார் கூந்தற்கு விரைந்து
                                                                           --- அகத்தியர் குணவாகடம்
முதியார் கூந்தளையரைத்து, இலநீரிர் கலக்கி குடிக்க மாறச்சுரமும் திரி தோடமும் தீரும்.






பாடல் –
பிரிந்த விளநீறிர் பின் முதியோர்க் கூந்தல்
அறிந்ததனின் வேறை யாரைத்துச் – சொரிந்துன்ன
மாறாச் சுரமுடனே வாதபித்த சேத்துமமும்
கூறாகப் போகுங் குளிர்ந்து 

                                       --- தேரையர் குணவாகடம் 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி