அ - வரிசை - அரசு

அரசு – ARASU
























வேறு பெயர்அச்சுவத்தம், அஸ்வத்தம், திருமரம், சுவாலை, பேதி பனை,கனவாம், சராசனம், பிப்பிலம்.
ஆங்கிலப் பெயர்THE PEEPUL TREE, SACRED FIG
தாவரவியல் பெயர்FICUS RELIGIOSA LINN
இது இந்தியாவில் எங்கும் சாதாரணமாய்ப் பயிராகிற பெருமரங்களுள் ஒன்று. ஆணி முதல் ஆவணித் திங்கள் வரையில் பூக்கும். பிராமணர்களால் இம்மரம் தெய்வத் தன்மை உடையதென நம்பப்படுகிறது. இதனால் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகாமையிலும் வைத்து பயிர் செய்யப்படுகிறது.
மருத்துவ பகுதிஇலை, வித்து, பட்டை, வேர்.
சுவை – துவர்ப்பு, கைப்பு உள்ளது, வீரியம் – சீதம், பிரிவுஇனிப்பு
செயல் வித்து – மலமிளக்கி LAXATIVE
இலை, வேர், பட்டை –துவர்ப்பி ASTRINGENT  
குணம் – இளைக் கொழுந்து, தாதுவை விருத்தி செய்யும், சுரத்தையும் முத்தோட கோபத்தையும் போக்கும்.
வித்து – சுக்கில நோய், குறள் வரட்சி, தாகம், இவற்றை நீக்கும்
மரப்பட்டை, வேர்ப்பட்டை – புண்களை ஆற்றும்































பாடல் –
அரசம்வேர் மேல்விரணம் ஆற்றும் வித்து
வெருவ்வரும் சுக்கில நோய் விட்டும் – குரல்விறல்வி
தாகமொழிக் குங் கொழுந்து தாதுதரும் வெப்பகற்றும்
வேக முத்தோடம் போக்கும் மெய்
                                                                          ---- அகத்தியர் குணவாகடம்
இலைக் கொழுந்தைப் பாலில் அரைத்து சருக்கரை சேர்த்து உன்ன சுரம் முப்பினிக் கோபம் தணியும், தாது விருத்தியையும் வித்தைத் தக்க அளவில் சூரணஞ் செய்து உட் கொண்டுவர மலச்சிக்கல் சுக்ல நோய் குரல்  வரட்சி தாகம் தீரும் சீரனசக்தி அதிகரிக்கும்.
பட்டையை இடித்துப் பொடியாக்கிக் கருக்கிய சாம்பலில் கொஞ்சம் எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல் சாந்தமாகும்.
படை தூளில் கால் முதல் அரைப் பலம் எடுத்து குடிநீர் செய்து கொடுக்க சொறி சிரங்குகள் குணமாகும் வெப்பகலும். பட்டையின் நுண்ணிய துகளை புண்ணின் மீது தூவிவர புண் ஆரிவரும் 

அரசமரம் பேரு மரவகுப்பைச் சார்ந்தது --- 

















Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி