அ - வரிசை - அழிஞ்சில்

அழிஞ்சில் – AZHINJIL
























வேறு பெயர்அங்கோலம், செம்மரம், செய்
ஆங்கிலப் பெயர்SAGE LEAVED ALANGIUM
தாவரவியல் பெயர்ALANGIUM DECAPETALUM
இம்மரம் தென் இந்தியா பர்மா இவ்விடங்களில் வெப்ப பாங்கான இடங்காளில் பயிராகின்றது.
மருத்துவ பகுதிவிதை, பட்டை
சுவை – கைப்பு, வீரியம் மவெப்பம், பிரிவுகார்ப்பு.
செயல் --- உடல்தேற்றிALTERATIVE
          புழுக்கொல்லி --- ANTHELMINTIC
         சிறுநீர் பெருக்கி --- DIURETIC
         வாந்தியுண்டாகிEMETIC
         வெப்பகற்றி ------- FEBERIFUGE
        மலமிளக்கி ---------- LAXATIVE
         குமட்டல்லெ ழுப்பி – NAUSEANT 
விதையின் செயல் – உடலுரமாக்கி – NUTRITIVE  
குணம் – வாத கோபம் கபதொடம், சீவடியும் பெருநோய் ஆகியாவை இவற்றை நீக்கும் ஆனால் பித்தத்தை உயர்த்தும்
பாடல் –
அழிஞ்சிலது மாருதத்தை யையத்தைத் தாழ்த்தும்
ஒளிஞ்சபித் தத்தை யுயர்த்தும் – விழுஞ்சீழாங்
குட்டமெனு நோயகற்றும் கூறு மருந் தெய்திடல்
திட்
                                     ------- அகத்தியர் குணவாகடம்  






























மருத்துவகுணம் – இதன் வேர்ப்பட்டை கால் முதல் அரைப்பலம் எடுத்து குடிநீர் செய்து அல்லது ஊரல் கசாயம் செய்து கொஞ்சம் நெய் சேர்த்து கால் முதல் அரை ஆழாக்கு அளவாக உட்கொள்ள நாட்பட்ட கடிவிடம் பாம்புக் கடிவிடம் விடக்கடியால் உண்டான தாபிதம் நீங்கும் பெருங் குடலி தங்கிய பூச்சிகள் வெளிப்படும்.
அரைக்கால் முதல் கால் பலம் வேற்படை எடுத்து கழுநீரில் அறைத்துக் சிறிது தேன் விட்டுக் கொடுக்க அசீரண பேதி நிற்கும்.
குட்டம் முதலிய சரும ரோகங்களிலும் மேகவிரனங்களிலும் சாதாரண சுரங்களிலும் இப்படையை அளவு படுத்தி சுத்த நீர் விட்டரைத்து உள்ளுக்கு கொடுத்து நற்பலன் கண்டாதுண்டு. சுரம் நீங்க மற்றைய ரோகங்களில் உப்பில்லாப் பத்தியம் வைத்து மோர் அல்லது பால் கூட்டிய சோற்றை உண்ணும் படி செய்யவேண்டும்.
        கீல்வாதம் மிக்க கடுமை செய்யும் தருணத்தில் வேர்ப்பட்டைக் குழித்தயிலத்தை மேலுக்குத் தடவிவர சாந்தம் அடையும்.  
        இத்தைலத்துடன் கொஞ்சம் வாலைரசம் சேர்த்துக் குழப்பியதில் மூன்று முதல் ஐந்து துளிவரையில் சருக்கரையில் கலந்து புகட்டி கடும்பத்தியம் காக்கும்படி செய்ய மேகப் பிடிப்பு மேகப்படைகளுக்கு, மேகவெடிப்பு, சொறி சிரங்கு நீங்கும்.
        இப் பட்டையை நுண்ணிய பொடி செய்து மேக விரணம் சீவடிகிற குட்டம் சொறி சிரங்கு இவைகளின் மீது தூவிவர குணமாகும்.
        இப்பட்டைக்கு மாந்தம் சுரம் சந்நிகளும் போம் என்பது தன்வந்திரி கருத்து ( வைத்திய குரு நூல் – 200 )
        பட்டை பித்தத்தை உயர்த்தும் எனினும் இதன் வித்து இரத்த பித்தரோகம் இரத்த வாந்தி பித்த எரிச்சல் இவைகளைப் போக்கும். இவைகளுக்கு வித்தின் பருப்பு கால், அரை வராகனெடை பசுவின் பால்விட்டு அரைத்துப் பசுவின்பாலில் கலந்து கொஞ்சம் சீனி கூட்டி உபயோகிக்கலாம் வித்திலிருந்து தைலம் இறக்கி மறைப்பு மையாக உபயோகிக்கிறார்கள் இதனை
பாடல் –
தொழுஞ்சகமோ  கக்கரப்பிற்  சொல்அஞ் சனமாம்
அழிஞ்சில் விதை யென்றறி
                                                                           --- அகத்தியர் குணவாகடம்
மூன்று முதல் ஐந்து துளி சருக்கிரையுடன் சேர்த்து குட்ட நோயில் உபயோகிக்கலாம்.
குறிப்பு  – அழிஞ்சிற் பட்டையினால் இலிங்கம் மிகச் சிறந்த சுத்தியாகும்.( அகத்தியர் – 12000   

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி