அ - வரிசை - அழவனம்

அழவணம் – AZHAVANAM

























வேறு பெயர் – ஐவனம், மருதோன்றி, சரணம்
ஆங்கிலப் பெயர்HENNA PLANT
தாவரவியல் பெயர் – LAWSONIA ALBO 
                                                  LAWSONIA  SPINOSA
                                                  LAWSONIA INERMIS
இது இந்தியாவில் முழுவதும் பயிராகும் சிறு மரவகுப்பைச் சேர்ந்தது.
மருத்துவ பகுதி – இலை, பூ, வித்து, பட்டை
சுவைதுவர்ப்பு, வீரியம்வெப்பம், பிரிவுகார்ப்பு.
இலை – செயல் – துவர்ப்பிASTRINGENT
                 புண் அழுக்கற்றிDETERGENT 
                 நாற்றம் அகற்றிDEODORANT
குணம் – கீல்வாதம், வாதக் குடைச்சல், சிரரோகம், கைகால்வழி, எரிச்சல் ஆகிய இவைகட்க்கு அழவன இலையை புளித்த காடியேனும், எலுமிச்சம்பழச் சாறு விட்டு அரைத்துப் பூசி வரலாம். இலையைப் பாதத்தில் தேய்ப்பதால் கால் எரிச்சல் போம்.
நசுங்குவதால் நேரிடும் விரணம் சுளுக்கு இலைகளுக்கு இலையை சிதைத்துக் கட்ட குனமுன்டாகும்.
இலையை அரைத்து வைத்துக் கட்ட கண் வேக்காடு குணப்படும் மூன்று நாளைக்குள் இதன் நற்குணம் விளங்கும்.
அம்மை போட்டா காலத்தில் கண்களுக்கு அம்மையால் யாதொரு தீங்கும் நேரிடாமல் பாதுகாக்க இலையை அறைத்துக் இரு பாதங்களின் அடியில் வைத்துக் கடலாம். இலையை அரைத்து நகங்களுக்கு அறைத்துக் வைக்க நகம் சிவக்கும் இப்படிச் செய்து இந்திய மாதர்களின் வழக்கம். இதனால் நகம் நோயிலிருந்து பாதுகாக்கப்படும்.
அரைத் தோலா எடை இலையை எடுத்து பூண்டு திரி ஒன்று மிளகு ஐந்து சேர்த்து அரைத்து காலையில் மாத்திரம் மூன்று நாள் ஐந்து நாள் வரை கொடுத்து உப்பிலாப் பத்தியம் வைக்க மேகத் தழும்பு நீங்கும்.
இலையை நீராகாரத்தில் ஒரு இரவு ஊறவைத்து மறுநாள்காலையில் இருந்து இருபது நாள் வரை காலையில் கொடுத்துவர மேகச் சொறி படைகள் நீங்கும். இதன் ஊரல் கசாயம் சுளுக்கு, தாபனம், இது காயங்களுக்கு ஒற்றிடங் கொடுக்கவும். கழுவவும், வாய்புண்ணுக்கு கொப்பளிக்கவும் வெள்ளைக்கு வஸ்தியில் செலுத்தவும் உதவும்.
        இலைச் சாற்றில் அரை உச்சிக் கரண்டியளவு எடுத்து அரையாழாக்குப் பாலுடன் கலந்து கொடுக்கவும். கைகால் வலியும் அரை ஆழாக்கு நீரில் ஒருவராகன் எடைக்குச் சருக்கரை கலந்து கொடுக்க சுக்கில நஷ்டம் தீரும்.
பூ – செயல் – குளிர்ச்சியுண்டாகிREFRIGERANT 
            உறக்கம் எழுப்பிSOPORIFIC
குணம் – இதன் பூ வை இராக்காலங்களில் தலையணையின் கீழ் வைத்து படுக்க நித்திரையுண்டாக்கும் உடல் வெப்பம் மாறும்.
வித்து செயல் – நாற்றம் அகற்றிDEODORANT
குணம் – வித்துக்கு பில்லி சூனியம் போம், பூதங்கள் செய்கை கெடும்
பாடல் –
மருதோன்றி யின் விதைக்கு மாபில்லி சூனியம்
விருதாண்ட போய் பூதம் மேலும் –
                                                                            --- அகத்தியர் குணவாகடம்
வித்தை நெருப்பில் போட்டு புகைக்க மேற்கண்ட கிரியாச் செய்கைகள் நீங்கும். பூ அல்லது விதிகளின் ஊரல் கஷாயம் தலைவலிக்கும் தாபிதங்களுக்கு. ஒற்றிடமிட நற்குணந்தரும்.
வேர் பட்டை - செயல் – துவர்ப்பிASTRINGENT
                       தாது வெப்பகற்றிSEDATIVE
                       உடற் தேற்றி -------- ALTERATIVE
குணம் – மாதர் ருதுகால சோனித தோட்டம் அசிர்க்கரா ரோகம் பித்த நோய் ஆகியவை போக்கும்.
பாடல் –
சோனித தோடமெல்லாம் சொலாமலேகிவிடும்
பேணுவார் இரத்தமோடு பித்தம் போம் –கானா
ஒரு தோன்றலென்னு மதனோதுமெழில் மாதே !
மருதோன்றி வெறால் மறைந்து
                                                                       ---- அகத்தியர் குணவாகடம்
வேர்ப்பட்டையை ஊறல் கசாயம் செய்து கொடுத்துவர மேற்கண்ட நோய்களும் காமாலை இடப்பட்டு வலப் பாட்டு ஈரல் வீக்கம், கல்லடைப்பு நீங்கும் இக் கஷாயத்தைக் குஷ்டத்திற்கும், கொடுப்பதுண்டு. மேலும் சரும வியாதி சுட்ட புண் மேகப்புண் இவைகளைக் கழுவவும் உதவும்.
குறிப்பு – இதன் இலை கெந்தகத்தைச் சுத்தி செய்யும். இதன் பட்டை தாம்பிரத்தை செந்தூரிக்கும்.

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி