அ - வரிசை - அறுகம்புல்

அறுகம்புல் – ARUGAM PUL
























வேறு பெயர்மூதண்டம், அறுகு, பதம், தூர்வை, மேகரி.
தாவரவியல் பெயர்GYNODON DACTYLON
இது எல்லா இடங்களிலும் வளரக் கூடியது சிறு கோடி வகுப்பு
மருத்துவ பகுதி – இலை, வேர்
சுவை – பணிப்பு, வீரியம்சீதம், பிரிவுஇனிப்பு.
செயல் – வரட்சியகற்றிEMOLLIENT
         துவர்ப்பிASTRINGENT
சிறுநீர்ப் பெருக்கிDIURETIC
குருதிப் போக்கடக்கிSTYPTIC
குணம் --- திரிதோடம், ஈளை (கோழை) கண்நோய், கண்புகைச்சல், தலை நோய்,  இரத்தபித்தம், மருந்துகளின் வெப்பம் ஆகிய இவைகளைப் போக்கும்.
பாடல் –
அறுகம்புல் வாதபித்த ஐயமோ பீளை
சிறுக அறுக்கும் இன்னுஞ் செப்ப – அறிவுதரும்
கண்ணோயோடு தலைநோய் கண்புகைச்சல் ரத்தபித்தம்
உண்நோய் யொழிக்கும்
மருத்துவ குணம் – அருகம்புல்லின் சீத ஊரல் கியாழத்துடன் பாலுஞ்சேர்த்து உட் கொள்ள மூலரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.
        அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றைக் கண்ணுக்குப் பிழிய கண்ணோய், கண்புகைச்சல், மூக்கிலிட இரத்த பீனிசமும் காயப் பட்ட இடத்தில் பூச இரத்தம் வடிதல் நிற்கும். புண்களின் மீது தடவ, புண் ஆரிவரும் இதை உள்ளுக்கு கொடுத்துவர பெருச்சாளி விடம் நீங்கும்.
        அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து தடவிவர சொறி சிரங்கு படர்தாமரை, கிருமி ரோகம் சீதபித்தம் நீங்கும்.
        அறுகம்புல், கடுக்காய்த்தோல், இந்துப்பு, கிரந்தி தகரம் கஞ்சாங் கோரை  இவை சமபாகமாக எடுத்து மோர் விட்டரைத்து பூச சொறி சிரங்கு படர் தாமரை ஒழியும், கிருமி சாகும்.
அறுகம் வேர் குணம் –
        அருகின் வேர் கிழங்கால் தணியாத பற்பல வெப்பம் தீரும் திரிதோட ரோகங்கள் நீங்கும் உடல் வனப்பு மிகும்.
பாடல் –
ஆறா அழல்லெல்லாம் மாறும் முத்தோடமது
வீளுதிருக்கு நல்ல மேனிதரும் – மாறாக்
கடியமரலங்களனி காரளக மின்னே !
கொடியறுகம் புற்கிழங்கை கூறு
மருத்துவகுணம் –
        இதைக் காணு போக்கி கால்பலம் எடுத்து அத்துடன் வெண் மிளகு பத்து சேர்த்து கஷாயமிட்டு வடித்து அதில் பாக்களவு பசுவின் வெண்ணையை கூட்டி உட் கொள்ள மருந்தின் வேகம்,இராசவேக்காடு, மூலக் கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு கல்லடைப்பு, வேட்டை மூத்திர தாரை எரிச்சல் முதலானவைகள் நீங்கும் தயிரில் அறைத்துக் கலந்து கொடுக்க தந்தி பிரமேகம் நீங்கம்.
         இவ் வேரைக் கொண்டு செய்யும் தூரவைத் தயிலத்தின் குணத்தை தேரையர் தைலவருக்க சுருக்கத்தில் காண்க.

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி