அ - வரிசை - அறு நெல்லி

அருநெல்லி – ARUNELLI






ஆங்கிலப் பெயர் COUNTRY GOOSE BERRY
தாவரவியல் பெயர் AVVERRHOEA ACIDA
இது சிறு மரக் கூட்டத்தை சேர்ந்தது. மலேயா தேசத்துப் பயிராக கூறப்படுகிராது, இந்தியாவில் தோட்டங்களிலும் வைத்துப் பயிரிடப்படுகிறது.
மருத்துவப் பகுதி – இலை, காய். விதை, வேர்.
சுவைபுளிப்பு, வீரியம் – வெப்பம், பிரிவுகார்ப்பு.
செயல் – இலை –வியர்வை பெருக்கி DIAPHORETIC
         விதை – மலமிளக்கி LAXATIVE
         காய் – பித்தசமணிANTIBILIOUS 
மருத்துவ குணம் – இலை – இதை அரைத்துப் புண்ணைக் காயளவு எடுத்து கால் படி மோரில் கலந்து  மூன்று நாள் காலை, மாலையில் மாத்திரம் சாப்பிட காமாலை நீங்கும். இதைக் கொள்ளும் போது உப்பை நீக்கி சோற்றுடன் வெள்ளாட்டுப் பால் விட்டு கலந்து சாப்பிடவும்.
மருத்துவ குணம் – காய் – இக்காயை, சீதபித்தம், காசம், தாகம் உட்சூடு இவைகட்கு வழங்கலாம்.

பாடல் --
அருநெல்லிக் காய்குளிர்ச்சி யாம் பித்தம் போக்கும் 
மருத்துவர் பால் துரிசை மாற்றும் – விரியுலகில்
தாகத் துயர் நீக்குஞ் சாரிருமலைத் தொலைக்கும்
ஆகக் கொத்திப் பகற்று  மாங்கு
                                                                        --- அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் – அருநெல்லிக் காய்ச்சாறு, பச்சை திராட்சை சாறு, வெள்வெங்காயச்சாரு வகைக்கு சம பாகம் எடுத்துக் கூட்டியதில் அறையாலாக்கு எடுத்து அதில் படிக்கார பற்பம் இரண்டு குன்றி அளவு சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கொடுத்துவர மேக வெள்ளை நீங்கும்
அருநெல்லிக்காய் சாறு ஒரு பங்கு உடன்  இரண்டு முதல் மூன்று மடங்கு சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து அரை முதல் ஒரு அவுன்ஸ் ( 25 ML ) வீதம் தண்ணீருடன் கலந்து சாப்பிட உட்சூடு, பித்தம் தாகம் நீங்கும்.
அருநெல்லி வற்றல், சீரகம், நெற்பொறி, திப்பிலி வகைக்கு ஒன்றே கால் விராகன் எடை எடுத்துக் குடிநீரில் செய்து கொடுக்கலாம். அதில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து வாந்தி நிற்கக் கொடுக்கலாம். அருநெல்லி வடகத்தை துவையலாக உபயோகிக்க பித்தம் சாந்தியாகும். தேகம் குளிர்ச்சியடையும். நேத்திரம் ஒளி பெரும்.
வேர் – இதனால் த்நிச்சுரம், அரோசகம், முத்தோடவாந்தி பித்த சந்நிவாதம் ஆகியவை போம்.

பாடல் –
சுத்த சுரம் அருசி தொழாப் பெரும்வாந்தி
பித்த சந்நி பாதம் இவை போகுங்க்கான் – மெத்த மனம்
நாறுமலர்க் கூந்தன் மின்னே ! நாவுக் கினிமை எனக்
கூறுமாறு நெல்லியின் வேருக்கு
                                                                       --- அகத்தியர் குணவாகடம்

மருத்துவ குணம் – இதை அரைத்து கொடுக்க அரோசகம், சுரம்,வாந்தி நீங்கும் அளவு கால் பலம் எடுத்துக் கொள்ளவும்.
வித்து – இதைப் உலர்த்தி பொடித்து எடுத்துக் கொண்டு கால் பலம் எடுத்து சர்க்கரை கலந்து சாப்பிட மலம் இளகும். 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி