அ - வரிசை - அறுவாள்மூக்கு

அரிவாள் மூக்குப் பச்சிலை – ARUVAL MOOKKU PACHSILAI



































வேறு பெயர் – அரிவாள் மனைப் பூண்டு
தாவரவியல் பெயர்SIDA RHOMBOIDEA – LINN
இது சாதரணமாக தன்னிச்சையாக பயிராகும் பூம்டினம். தென் இந்தியா எங்கும் கிடைக்கும்.
மருத்துவ பகுதி – இலை
சுவை – துவர்ப்பு, சிருகைப்பு , வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு .
 செயல் -- குருதி பெருக்கடக்கி --- STYPTIC  
குணம் – ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தை ஆற்றும். கொடிய விடத்தையும் இரத்தக் கெடுதியில் பிறந்த தலை நோயையும் நீக்கும்.
பாடல் –
வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்திவிடும்
துட்டக் கடு வோட்டுந் தோன்றி மிகக் – கெட்ட
பிரிவார்ற் றலையைப் பிளக்கும் வலி நீக்கும்
அரிவாள் மூக்குப் பச்சிலை 
                                                                        --- அகத்தியர் குணவாகடம்

வெட்டுக் காயமுள்ள இடத்தில் இப்பச்சிலையை அரைத்துக் பூச இரத்தம் நிற்கும், காயம் வெகு சீக்கிரத்தில் ஆறிப்போம். இப் பச்சிளையுடன் மிளகு, பூண்டு சேர்த்துக் கர்கமாக்கி கொடுக்க விடம் நீங்கும். மேற் கூறிய தலை நோயும் விலகும். 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி