அ - வரிசை - அறுகீரை

அறுகீரை – ARUKEERAI













வேறு பெயர்அரைக்கீரை,  அறைக்கீரை
தாவரவியல் பெயர்AMARANTUS TRISTIS
இது தெனிந்தியாவில் சாதாரணமாகப் பயிராகக் கூடிய ஓர் குத்துச் செடி.
மருத்துவ பகுதி – கீரை,விதை.
சுவை இனிப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு இனிப்பு
செயல் --- வெப்பம் உண்டாக்கி --- STIMULANT
          காமம் பெருக்கி ------------  APHRODISIA  
குணம் --- இக் கீரையை கறியாக்கி உண்ண சுரம் நடுக்கல் சந்நிபாதம், கபரோகம், வாத நோய் ஆகிய இவைகள் போம். தாது விருத்தியாம்.
பாடல் –
காய்ச்சல் குளிர்சன்னி கபநோய் பலபிணிக்கும்
வாய்ச்ச கறியால் வழங்க்குங்கான் – வீச்சாய்க்
கருதுமோ வாய்வினங் காமமிக வுண்டாம்
அறுகீரை யைத்தின்றறி
--- அகத்தியர் குணவாகடம்

இது தென்னாட்டில் பல பிணிகளிலும் பத்திய பதார்த்தமாக வழங்கப்படும்.
அரைக்கீரை விதை –
மருத்துவ குணம் –
        இதை நீர் போக்கிய தேங்காய்க்குள் செலுத்தி தமரிட்டு சதுப்பு நிலத்தில் புதைத்து 40,50, நாள் சென்றபின் எடுத்து ஓட்டை நீக்கி மற்றவைகளை நல்லெண்ணையுடன் கூட்டி எரித்து தைலம் வடித்துத் தலை முழுகி வர சிரோரோகம் போம். தலை மயிர் கருத்து வளரும்

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி