ஆ - வரிசை ஆகாசக் கருடன்

ஆகாசகருடன் – AKASA GARUDAN



















வேறு பெயர் – ஆகாசக் கெருடன், ஆகாயக் கருடன், கருடன், கொல்லன் கோவை, பேய்ச்சீந்தில்
ஆங்கிலப் பெயர்BRYOMS

தாவரவியல் பெயர் BRYONIYA EPIGOEA, CORAL CARPUS, EPIGAEUS HOOK  

  இது கொடிவகையைச் சேர்ந்தது இந்தியாவில் எல்லா இடங்களிலும் வேலிகளிலும் படர்ந்து இருக்கும்.

மருத்துவ பகுதிசமூலம், சிறப்பாக கிழங்கு

சுவை கைப்பு, வீரியம் வெப்பம், பிரிவு – கார்ப்பு.

செயல் – உடல் தேற்றிALTERATIVE
         உரமாக்கி -------- TONIC
சமூலம் குணம் – சூலை, பாண்டு முத்தோடம், அக்கிப்புன், உட்சூடு கண்டமாலை, குடல்வலி, பெருநோய் ( மா குஷ்டம் )  ஆலவிடம் ( மாவிசம் ) கரப்பான், நமைச்சல் ஆகிய இவைகளை 

கொல்லன் கோவைச் சமூலத்தால் நீங்கும்.

பாடல் –
சூலை பாண்டு தைத்திரி தோட்டங்கள் வெப்புக் கண்ட
மாலை குடலின்வழி மாகுட்டம் – ஆலவிடம்
உட்கரப்பான் மெய்யரிப்பும் உண்டோ கொல்ல்ன்கோவை
கைக்குளிருக்க விண்ணுங் கான்
மருத்துவ குணம் –

இது துட்ட விடம், பாண்டு, உட்சூடு, சூலை, கிரந்தி குட்டம் நமைச்சல் அக்கிப்புன், குடல் நோய், கண்டமாலை, முத்தோடம் ஆகிய இவைகளைப் போக்கும்.

பாடல் –
துட்டவிடம் பாண்டு வெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்டம் அறிப்பக்கி கொண்குடல் நோய் – கெட்டகண்ட
மாலை போம் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோட
வேலை போம் பாரில்விளம்பு 
--- அகத்தியர் குணவாகடம்
மருத்துவ குணம் –

கிழங்கை நிழலி உலர்த்தி மேற்றோலை நீக்கி நுண்ணிய பொடி செய்து அரை முதல் ஒரு வராகன் எடை எடுத்துச் சருக்கரையும் கலந்து காலை மாலை இரு வேலையும் உட் கொண்டு, புலி, உப்பு, நீக்கிப் பத்தியங் காக்க மேற்கண்ட நோய்கலன்றி, பாம்புக் கடிவிடம் கீல்பிடிப்பு மேகரோகங்கள் தீரும்
        மேற்படிப் பொடியில் ஒரு வராகன் எடை எடுத்துக் கசயத்தைச் செய்து கொடுக்க சீதஞ் சீதமாய் கழிகின்ற பேதி குணமாகும். வேண்டிய அளவு கிழங்கு எடுத்து அதற்குத் தக்கபடி வெங்காயம், சீரகம் சேர்த்து சிற்றாமணக்கு என்னை விட்டரைத்து பற்றிடக் கூடிய பக்குவத்தில் எடுத்து கீழ் வாதங்களுக்கு பற்றிட மிக நன்மை பயக்கும். கொல்லன் கோவையைக் கொண்டு செய்யப்படும் தைலங்கள் வாத ரோகத்திற்கும் விடங்களுக்கு சிறந்தது.     

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி