இ - வரிசை இரேவல் சின்னி

 



இரேவல் சின்னி --- REVAL CINNI

வேறு பெயர் – பேதிக் கிழங்கு, மஞ்சட் சீனிக் கிழங்கு, வரியாத்து கிழங்கு,நாட்டு ரேவல் சின்னி.

( RHEUME MODI, R. ACUMINATUM, R. AUSTRALE, R. MOORCRO  OF TICANUM, R. SPECI FORME )

ஆங்கிலப் பெயர் – HIMALAYAN – RHUBARB

தாவரவியல் பெயர் – R. WEBBIANUM OF THE GERMS OF POLYGONACEAE

இது திபெத்து தார்தாரி, பிரதேசங்களிலும், இந்தியாவில் இமயமலைப் பிரதேசங்களில் பயிராகிறது.இமயமலையில் விளைவதற்கு, நாட்டு ரேவல் சின்னி, என்று பெயர். இது சீன தேசத்துச் சரக்குக்குத் தாழ்ந்தது என்று கருதப்படுகிறது. சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு வட்டமாகவாவது, தட்டையாகவாவது இருக்கும். இதில் ஒரு துவாரம் இருப்பது உண்டு வெளிப்புறம் மஞ்சள் சாயலாகவும்  உட்புறம் வரிவரியாகவும் மென்றால் மணலைப் போல் நாரணர வென்றும் இருக்கும். இதில் ஒரு வித வாசனையுமுண்டு சொத்தை விழுந்திராது.

சுவை – துவர்ப்பு,கைப்பு, வீரியம் – வெப்பம், பிரிவு – கார்ப்பு

செயல் – துவர்ப்பி – ASTRIGENTA

உரமாக்கி --- TONIC

பெருமலம் போக்கி --- CATHARTIC

பசித்தூண்டி ---------------- STOMACHIC

குணம் – மலபந்தம், அக்கினி மாந்தம், பாண்டு, இவற்றைப் போக்கும் தீபனத்தை விருத்தி செய்யும்.

மருத்துவ குணம் – வேதனையின்றி பேதியாக்குகிற குணம் இதற்கு இருப்பதால் மலபந்தமுடைய பாலர்களுக்கும், பாண்டு ரோகமுடைய பெண்களுக்குப் கெர்பவதிகளுக்குமெ இதைக் கொடுக்கலாம்.

இதைக் குறைந்த அளவில் தனித்தேனும், வேறு மருந்துகளுடன் செர்த்தேனும் கொடுக்க அக்கினி மந்தம் நீங்கித் தீபனம் உண்டாகும்.

அதிசார பேதியில் கெட்ட மலத்தை வெளிப்படுத்த இதை வழங்கலாம்.ஒன்றை முதல் நாலு குன்றியளவு தேனுடன் கலந்து கொடுக்க ஜீரணசக்தி உண்டாகும். பத்து முதல் இருபது குன்றியளவு தேனில் கலந்து கொடுக்க பேதியாகும்.

இரேவல் சின்னியுடன் சரக்கொன்றை புளி, வெடியுப்பு,சுக்கு,தேவதாரு,சந்தனம்,சடாமஞ்சில் இவைகளை சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்து வயிற்றின் மீது பற்றிட மலக் கட்டு ஜலக்கட்டு நீங்கும் கல்லீரல் மண்ணீரல் வீக்த்துக்கு இதை பற்றுப் போட அவைகள் நாளுக்கு நாள் சுருங்குவதை காணலாம்.

**********

 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இலவங்க பத்திரி