இ - வரிசை இலவங்க பத்திரி




இலவங்கப் பத்திரி – LAVANGKA PATHTHIRI

ஆங்கிலப் பெயர்ACHINNAMUM LEAVES

தாவரவியல் பெயர்CHINNAMUM TAMALE, CASSIA LINGNEA

       இது இந்தியாவில் இமயமலை, கீழ்வங்காளம் முதலிய இடங்களிலும், பர்மா முதலிய நாடுகளிலும் விளைகிற ஒருவகை. இலவங்கப் பட்டைச் செடியின் குணமும் வாசனையும் இதற்கு உண்டு. இதன் பட்டை விலையுயர்ந்த இலங்கைக் கருவாபட்டைக்குப் பதில் உபயோகப்படுகிறது.

சுவை கார்ப்பு, வீரியம் --- வெப்பம், பிரிவு – கார்ப்பு

செயல் --- வெப்பமுண்டாக்கி ------ stimulant

          அகட்டுவாய்வகற்றி --- carminative

          பசித்தூண்டி ------- -------- stomachic

          வியர்வை பெருக்கி --- diaphoretic

குணம் --- மேகசுரம், சீதசுரம், வேட்டை, சுவாசம், காசம். தாகம், பித்தம், வாந்தி, வாய்ப்புண், மேகக் கட்டி, தாது நட்டம், கைப்பு, அருசி, இவைகளைப் போக்கும்.

பாடல் ---

மேகசுரம் சீதசுரம் வெட்டை சுவாசங் காசம்

தாகபித்தம் வாந்திசர் வாசியநோய் – மேகத்தின்

கட்டியோடு தாதுநட்டங் கைப்பருசி போக்கிவிடும்

இட்ட இலவங்கத் திலை

                                               ---  அகத்தியர் குணவாகடம்   

உபயோகம் – வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, இவைகளுக்கு பயன் தரும். கருவாப்பட்டை தைலம் போல் இந்த இலையில் இருந்தும் தயிலம் எடுக்கலாம் உபயோகிக்கலாம். இந்த இலை லேகியம் சூரணம் மற்றும் மசாலாப் பொருள்களில் கூட்டுச்சேரும் இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி