இ வரிசை இரட்டைப் பேய்மருட்டி






இரட்டைப் பேய்மருட்டி Erattai -  pei – marutti

வேறு பெயர் வெதுப்படக்கி,பேய்மருட்டி,பேய்வருட்டி, பெய்வெருட்டி, பைசாசம், பெருந்தும்பை

Anisomeles Malabarica

English – Malabar cat – mint

Telugu – moga – bfra, Malataalam – pey –meratti, Sanskirit – pey – merutti

இது தென்னிந்தியாவிலும், இலங்கை, திருவிதாங்க்கூரிலும் பயிராகும்

மருத்துவ உபயோகப்பகுதி இலை,சமூலம்

சுவை கைப்பு, வீரியம் வெப்பம், பிரிவு கார்ப்பு.

செயல்பசித்தூண்டிStomachic

அகட்டுவாய்வகற்றி Carminative

வியர்வை பெருக்கி Diaphoretic

துவர்ப்பிAstringent   

குணம் இதனால் கணமாந்தம், பேதி, வயிற்று நோய், கரப்பான், கோரசுரம்.

மாந்தக ணங்கழிச்சல் மாறா வயிற்றுவலி

சேர்ந்து வருகரப்பான் தீச்க்சுரமும் போர்ந்துவிடும்

வேய்மிரட்டுந்த் தோளுடைய மெல்லியலே ! ராசியமாய்ப்

பேய்மிரட்டி யென்றொருகாற் பேசு

                                   ----- அகத்தியர் குணவாகடம்.

மருத்துவ குணம் இதன் இலையைக் கசாயமிட்டு கொடுக்க வாந்தி பேதி சீதசுரம், கோரசுரம், முறைக் காய்ச்சல், இருமல் குணப்படும். இக்கஷயத்தைக் குழந்தைகளுக்கு பல்முளைக்கும்போது உண்டாகும் பேதியில் உள்ளுக்கும் , கீல்வாதங்களில் மேலுக்கு ஒற்றிடமாக உபயோகிக்கலாம்.

இக்கஷயத்தின் ஆவியை முகர்ந்தும் உள்ளுக்குக் கொடுக்க வியர்வை உண்டாகும். விடாச்சுரம் நீங்கும்.

இதன் இலைச் சாற்றைப் பல் முளைக்கும் காலத்தில் உண்டாகும் பேதிக்கு உபயோகிக்கலாம்.    

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி