இ -- வரிசை இத்தி

 


இத்தி – Itti

வேறு பெயர் –இந்திரி, இறலி, சுவி.

English – Ficus.

Telungu – Juvvi, Kannadam – Itti , Malayalam – Itti, Sanskirit – Plaksham.

இது தென்னிந்தியாவில் ஏராளமாய் பயிராகும் தாவர வகுப்பைச் சேர்ந்தது,

மருத்துவ உபயோகம் – பிஞ்சு, காய், பட்டை.

சுவை – துவர்ப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல்

துவர்ப்பி – Astringent

பிஞ்சு –

குணம் – அதிசாரம், பெரும்பாடு, உட்சூட்டினால் பிறக்கின்ற பிணியினங்களை போகும்.

வாயு மலக்கட்டு மலக்கழிச்சல் கால்வழியே

சாயு மசிர்க்குள் ளேதங்குவெப்பி – நோயினங்கள்

எத்திக்கா தாரமூற் றிருப்பன விராவேநல்

இத்திக்காய் பிஞ்சுகளை யெண்

--- அகத்தியர் குணவாகடம்

இப்பிஞ்சுகளை அரைத்துக் கொடுத்தாலும் இதன்பட்டையைக் கஷாயம் செய்து குடித்து வந்தாலும், மேல்கண்ட பிணிகள் நீங்கும்.

இதன் காயை நெய் விட்டு வெதுப்பி தின்றாலும் வாத மலபந்தம் போகும்    

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி