இ - வரிசை இஞ்சி

 




இஞ்சி INJI

வேறு பெயர் அல்லம், ஆர்த்ரகம், ஆத்திரம், இலாக்கொட்டை, நறுமருப்பு, மதில்

Zengiber Officinalis

English – green ginger, fresh root of – dry ginger

 

Telungku – allamu, Malayaalam – inji, Kannadam – hashi – shunti, Sanskirit – ardrakam

இந்தியாவில் அநேக இடங்களில் பயிரிடப்படுகிறது.நீர் செழிப்புள்ள இடங்களில் முக்கியமாய் உண்டாகிறது. ஆயினும் செம்பாடுகளிலும், மணல் பூமிகளிலும் சிறப்பாகப் பயிரிடப்படுகிறது. சென்னை,கொச்சி, திருவிதாங்கூர், முதலிய இடங்களிலும் பஞ்சாப்,வங்காளம் முதலிய இடங்களிலும் ஏறாலாமாய் பயிரிடப்படுகிறது.

மருத்துவ உபயோகப் பகுதி கிழங்கு.

சுவை கார்ப்பு, வீரியம் வெப்பம், பிரிவு கார்ப்பு.

அகட்டுவாய்வகற்றிCarminative

பசித்தீதூண்டிStomachie

உமிழ்நீர்பெருக்கிSialagogue

 செரிப்புண்டாக்கிDigestive

வெப்பம்முண்டாக்கி Stimulant

தடிப்புண்டாக்கிRubefacient  

குணம் இஞ்சியை உபயோகித்தால் காசம், கபம், வெள்ளோகாளம், பித்ததோடம், சந்நிபாதசுரம், வாதசூலை, வாதகோபம், இவைபோம், பசியுண்டாகும்.

இஞ்சிக் கிழங்குக் கிருமல்ஐயம் ஒக்காளம்

வஞ்சிக்குஞ் சந்நிசுரம் வன்பேதி விஞ்சுகின்ற

சூலையறும் வாதம்போந் தூண்டாத தீபணமாம்

 வேலையுறுங் கண்ணாய் ! விளம்பு

---- அகத்தியர் குணவாகடம்.

இஞ்சியின் குணமே தென்றி யல்புட னுரைக்கக் கேளீர்

அஞ்சிடுஞ் சன்னி யெல்லா மகன்றிடும் பித்த தோடம்

நெஞ்சினி லிருமற் கோழை நெகிழ்ந்திடும் கபங்கள் தன்னை

மிஞ்சினி வருமோ வென்று விளம்பிடும் வேத நூலே

( ஏடு )

மருத்துவ குணம் இஞ்சிக்கிழங்கு சாதாரணமாய் ஊறுகாய், தேன் ஊறல், தித்திப்பு பானகம், முதலியன செய்வதற்கு உபயோகப் படுத்தப் படுகிறது.

மேலும் வயிறு சம்பந்தமான வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் வாந்தி குடல் நோய் முதலியவற்றுக்கும் ஜலதோஷம் இரைப்பு நோய், முதலிய நோய்களுக்கும் மதுவூறல் முறப்பா ஆகச் செய்து கொடுக்கலாம்.

முறப்பா செய்முறை

இஞ்சிச்சாரு, நீர், சர்க்கரை சேர்த்து தேன் பக்குவத்தில் பாகு செய்து குங்குமப்பூ ஏலம் ஜாதிக்காய் கிராம்பு இவற்றை பொடி செய்து தூவிக் கிளறி எடுத்து ஒரு தட்டில் விட்டு சமப் படுத்தி உளற வைத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

பித்த மயக்கத்திற்கு

இஞ்சிச்சாறு பத்துப் பங்கு பால் ஏழு பங்கு இத்துடன் கல்கண்டு மேற்கன்ற வற்றின் சம அளவு சேர்த்து சர்ப்பத் பதத்தில் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும் 20 – 30 ml நீருடன் சேர்த்து சாப்பிடலாம்.

இஞ்சியை வாயில் மென்று உமிழ் நீரை கொஞ்சம் கொஞ்ச மாக விழுங்கிவர தொண்டைப் புண் சளிக் குரல் கம்மல் தீரும்

அஜீரண பேதிக்கு இஞ்சிச்சாற்றை தொப்புளைச் சுற்றி தடவ நிற்கும்.

வாந்தி உமட்டளுக்கு இஞ்சிச் சாரும் வெங்காயச் சாரும் சம அளவு எடுத்து கொடுக்க வேண்டும்

நீரழிவு நோய்க்கு இஞ்சிச் சாறு கல்கண்டு சேர்த்துக் கொடுத்து வரலாம்

இஞ்சி கற்பம்

இஞ்சியை தோல் போக்கி துனுகலாகச் செய்து லேசாக் உலர்த்தி தேனில் ஊறவைத்து தினந் தோறும் கல்ப முறைப்படி உட்கொண்டால் நரை திரை மூப்பு இன்றி நீண்டநாள் இருப்பதுடன் தேகமும் அழகு பெரும் மனோபலமும் உண்டாகும்

இதற்கு பத்தியம் நெல் பொறி மாவுடன் பசுவின் நெய் கலந்து உணவாக உண்டு வர வேண்டும்

இஞ்சிச் சாறு, மாதுளம்பூ சாறு தேன் சமனெடை கலந்து வேளைக்கு 25 – 30 ml வீதம் சாப்பிட்டுவர ஈளை இருமல் சாந்தியாகும்

இஞ்சி, திரிகடுகு, ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனத் தூள், வகைக்கு பதினைந்து கிராம் எடுத்து சிதைத்து ஒரு லிட்டர் நீர் விட்டு 250 ml யாகக் குறுக்கி 5 – 6 வேலையாக சாப்பிட பித்த சாந்தியாகும்  

இஞ்சிச் சாறும், கழுதைப் பாலும் வகைக்கு 20 ml கலந்து உள்ளுக்குக் கொடுத்து உடலுக்கு ஆதளைஇலையும் முத்தெருக்கன் செவியும், ஓர் அளவாய் எடுத்து காடியில் அரைத்து உச்சி முதல் பாதம் வரை காலையில் பூசி மாலையில் குளித்துவரவும் இவ்விதம் பத்து நாள் செய்ய கடினமான தீராத உடல் எரிவு நீங்கும்

இருமல் இறைப்புக்கு

இஞ்சிச்சாறும் வெங்காயச் சாறும் எலுமிச்சம் பழச்சாறு இம்மூன்றும் சம பாகமாகக் கலந்து ஒரு வேளைக்கு 20 – 30 ml வீதம் ஒருநாளைக்கு இரண்டு வேளை வீதம் மூன்று நாள் சாப்பிட இரைப்பு இருமல் தீரும்.

 

இஞ்சி, சிவத்தை, சீந்தில் நிலவாகை, கொடுவேலி, கழற்சிக் கொடி, முடக்கறுத்தான், திரிகடுகு, பூண்டு வகைக்கு பத்துக் கிராம் எடுத்து சிற்றாமணக்கு எண்ணெய்  500ml அரைத்துக் கலக்கி காய்ச்சி வடித்து வேளைக்கு டேபிள் ஸ்பூன்  வீதம் கொடுத்துவர வாத குன்மம் தீரும்

இஞ்சியை பாலில் பத்துக் கிராம் அளவு அரைத்து 200 ml பாலில் கலந்து காலை,மாலை கொடுத்துவர இருமல், இளைப்பு, குன்மம், மயக்கம், பித்தம், வாயு தீரும் பசியுண்டாகும்

இஞ்சி வடகம்

இஞ்சி எட்டுப் பங்கு திரிகடுகு ஒரு பங்கு, உப்பு ஒரு பங்கு, கொத்தமல்லி விதை ஒரு பங்கு,கிராம்பு ஒரு பங்கு, ஓமம் ஒரு பங்கு, கடுக்காய் ஒரு பங்கு இவைகளை நெய் விட்டு வறுத்து பொடித்து பின்பு தயிர் விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு உருட்டி உலர்த்தவும் இதை வல்லை நோய், முப்பிணி மந்தம் உடல் நலிவு தீரும்                                  

 

 

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி