இ -- வரிசை இம்பூறல்





இம்பூறல் – Impural

வேறுபெயர் – இம்புராவேர், இன்புறாவேர், சிறுவர், சாயவேர்.

Oldenlandia Umbellata

(Hedyotis Umbellata)

Telungu – chiru veru, Malayaalam – chay ver, Kannatam – Chaya beru, Sanskirit – rajana.

சர்வ சாதாரணமாகத் தோட்டங்களிலும், மேட்டு நிலங்களிலும் பயிராகும். துணிகளுக்கு சிவப்புச் சாயம் ஏற்ற இதன் வேர் உபயோகப்படுத்துவதில் இராமேஸ்வரம் முதலிய தென்தேச கடற்கரை ஓரங்களில் பயிரிடப்படுகிறது. இது தரையில் படரும் ஓர் வகைச் செடி.  

மருத்துவ உபயோகப் பகுதி – இலை,வேர்,வேர்ப்பட்டை, சமூலம்.

சுவை – இனிப்பு, வீரியம் – சீதம், பிரிவு – இனிப்பு.

செயல் – கோழையகற்றி – Expectorant

குருதிப்பெருக்கடக்கி – Styptic

பித்த நீர் பெருக்கி – Cholagogue

குணம் – கபாதிக்கம், பித்தகோபம், பித்தசுரம், இரத்த வாந்தி, இருமல், ஈளை, சுவாசகாசம், வயிற்றிரைச்சல் விக்கல் முதலிய நோய்கள் குணமாகும்.

வேர்க்குனம் –

இன்புறா வேரை இதமாய் அருந்தினவர்க்குப்  

பின்புறா தையமொடு பித்தமே – துன்பம்

இருமல் சுவாசம் எரிசுரம்வ யிற்றுப்

பொருமலுப்பி சம்பறந்து போம்

--- அகத்தியர் குணவாகடம்.

மருத்துவ குணம் – இலையின் சூரணத்தை இரண்டுமடங்கு அரிசிமாவுடன் கலந்து அடியாகச் செய்து சுவாசகாசம், சாயம், உள்ளவர்கள் சாப்பிட்டு வரலாம்.

2 – இன்புறா சமூலச் சூரணம் 15 gm அதிமதுர சூரணம் -10 gm இவற்றை முறைப்படி கசாயம் செய்து 25ml - 30ml வரை தினம் இரண்டு வேளை அல்லது மூன்று வேளை, சாப்பிட்டுவர இருமல் சுவாசகாசம் காசம் சயம் முதலியன சாந்தமாகும்.

இலையின் சாற்றை பாலுடன் கலந்து சர்க்கரை சேர்த்து சாப்பிட மார்பு எரிச்சல் தீரும்

இதன் இலையும் வேரையும் சேர்த்து ஒரு பங்குக்கு இருபது பங்கு நீர் விட்டு கசாயம் செய்து விஷ கடிகளினால் உண்டான புண்களை கழுவலாம்.20 – 30 ml வரை இருமல்,இளைப்பு, கபக்கட்டுக்கு நோய்களுக்கு உள்ளுக்குக் கொடுக்கலாம் உதவலாம்.

மேல் கண்ட கசாயத்தை வெளிப்பிரயோகமாக சுர நோய்களில் ஏற்படும் கை,கால் எரிச்சலுக்கு உபயோகப் படுத்தலாம்.

இதன் வேரை கொண்டு செய்யப்படும் லேகியம் இரத்த பித்த நோய்க்கு வாயின் வழியாய் வெளிப்படும் இரத்தத்தை வெகு ஆச்சர்யப் படும்படி இரண்டொரு வேளையில் நிறுத்தும்.

“ இம்பூரலைக் காணாது இரத்தங் கக்கிச் செத்தனே “ என்ற சட்டமுனி வண்ணத்தில் குரிப்பட்டதையும் காண்க.

 

இம்பூறல் லேகியம்

இம்பூறல் வேர் பட்டையை தட்டி எடுத்து பாலில் அரைத்து பாலில் கரைத்து அதில் பனம் கல்கண்டு அதன் அளவுக்கு சேர்த்து கரைத்து காய்ச்சி பாகு பதத்தில் சிறிதளவு சாதிப்பத்திரி, சாதிக்காய் வால்மிலகுச் சூரணம் சேர்த்து கிண்டி பின் நெய் விட்டு தேன் விடாமல் பதமாக எடுத்துக் கொள்ளவும்.

அளவு சுண்டைக்காய் அளவு சாப்பிட்டுவர இரத்த காசம், இரத்த வாந்தி இரத்த பேதி தீரும்.

---- சித்த வைத்தியத் திரட்டு

 

இம்பூறல் வடகம்

இம்பூறல் சமூலம் ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கல்கண்டு ஒரு பங்கு சேர்த்து பொடித்து சூரணம் செய்து கொண்டு நன்றாக மைபோல் அரைத்து சுண்டக்காய் அளவு வடகம் செய்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு வடகமாக இரண்டு மூன்று நாள் கொடுக்க இரத்த பித்த ரோகம் இருமல் தீரும்           

Comments

Popular posts from this blog

ஆ வரிசை - ஆற்று நெட்டி

இ - வரிசை இரேவல் சின்னி

இ - வரிசை இலவங்க பத்திரி